இலங்கை படுதோல்வி ; டெஸ்ட் தொடரை வசப்படுத்தியது இந்தியா

Published By: Priyatharshan

06 Aug, 2017 | 08:43 PM
image

இலங்கைக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 53 ஓட்டங்களால் சொந்த மண்ணில் தோல்வியடைந்த இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என இந்திய அணிக்கு தரைவார்த்துள்ளது.

கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் கடந்த 3 ஆம் திகதி ஆரம்பமாகிய இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அந்தவகையில் தனது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 622 ஓட்டங்களைப்பெற்றபோது தனது முதல் இன்னிங்ஸை இடை நிறுத்திக்கொண்டது.

இந்நிலையில் தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ஓட்டங்களைப்பெற்று போலோ ஒன் ஆனது.

439 ஓட்டங்களால் பின்னிலையில் இருந்த இலங்கை அணியை போலோ ஒன் முறைமூலம் 2 ஆவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாட அழைத்தது இந்திய அணி.

இதையடுத்து 439 ஓட்டங்கள் பின்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி இன்றைய நான்காம் நாள் ஆட்டநேர முடிவின்போது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 386 ஓட்டங்களைப்பெற்று இன்னிங்ஸ் மற்றும் 53 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவிக்கொண்டது.

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையில் மற்றுமொரு போட்டி எஞ்சியுள்ள நிலையில், 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என வசப்படுத்திக்கொண்டது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35