இதழியல் வரலாற்றில் தனக்கென முத்திரைபதித்து தனியிடத்தை வைத்துள்ள வீரகேசரி நாளிதழ் 88 ஆவது ஆண்டில் இன்று ஆகஸ்ட் 6 ஆம் திகதி காலடி எடுத்து வைத்துள்ளது.

ஊடகத்துறையில் வீரகேசரி உள்ளூரில் மாத்திரமல்லாமால் உலக நாடுகளிலுள்ள தமிழர்களும் அதன் நாமத்தை உச்சரிக்கும் அளவுக்கும் ஆலவிருட்சம் போல்வளர்ந்துள்ளது. 

அந்தவகையில், இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்பே  ஸ்தாபிக்கப்பட்டவீரகேசரி நாளிதழ் பலதரப்பட்ட அரசியல் பொருளாதாரம் உட்பட பலவகையான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தது தொடர்ச்சியாக மக்கள் மத்தியில் தன்னை பலமாக வைத்துதொடர்ந்து அவர்களுக்கு பக்கபலமாகவே இருந்து வந்துள்ளதுடன் தற்போது இருந்து வருகின்றது.

இலங்கையில் முதன்மையான ஊடகங்கள் பல உருவாகிய காலத்தில் ஆணித்தரமாக தனது 88 ஆவது வயதில் கால்த்தடம் பதிக்கும் போது இன்னும் அதன் வளர்ச்சி திடகாத்திரமாகஇருக்கின்ற அதேவேளை, டிஜிட்டலிலும் தனியிடத்தைப் பிடித்துள்ளமையை இங்கு மறந்துவிட முடியாது.

இந்த முதுபெரும் பத்திரிகை பல நூற்றாண்டுக்கு மேல் பயணிக்க வேண்டுமென இறைவனை வேண்டுவதுடன் வீரகேசரி வாசகர்களும் தொடர்ந்தும். எம்முடன் பயணிப்பார்கள் எனவும் எதிர்பார்க்கின்றோம்.

அத்துடன் 88 ஆவது ஆண்டில் கால் பதித்துள்ள வீரகேசரி நாளிதழுக்கு வீரகேசரி இணையத்தளவசகர்கள் சார்பில் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவிப்பதில் வீரகேசரி இணையத்தளம் பெருமையடைகின்றது.