சட்­ட­வி­ரோ­த­மான முறையில் ஒரு தொகை வல்­லப்­பட்­டை­களை வெளி­நாட்­டிற்கு கொண்­டு­செல்ல முற்­பட்ட நான்கு இலங்­கை­யர்­களை கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் வைத்து  சுங்கப்  பிரி­வினர் கைது செய்­துள்­ளனர்.

நேற்று முன்­தினம் இரவு 9.35 மணி­ய­ளவில் 9W252 என்ற விமா­னத்தில் டுபாய் நோக்கி பய­ணிக்­க­வி­ருந்த போதே குறித்த சந்­தேக நபர்­களை கைது செய்­த­தாக சுங்கப்  பிரிவின் ஊடகப் பேச்­சாளர் தெரி­வித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரி­விக்­கையில்,

சந்­தே­க­ந­பர்கள் தமது பயணப் பொதி­களில் மிகவும் சூட்­சு­ம­மான முறையில் மறைத்து வைத்தே வல்­லப்­பட்­டைகளை கொண்டு செல்ல முற்­பட்­டுள்­ளனர். இவர்கள் மீது சந்­தேகம் கொண்டு பயணப் பொதி­களை சோத­னை­யிட்­ட­போதே சுங்கப் பிரி­வினர் அவற்றை மீட்­ட­துடன் குறித்த  நால்­வ­ரையும் கைது செய்­தனர்,

சந்­தேக நபர்­க­ளி­ட­மி­ருந்து 116 கிலோ கிராம் நிறை­யு­டைய வல்­லப்­பட்­டைகள் கைப்­பற்­றப்­பட்­ட­தா­கவும், அவற்றின் பெறு­மதி சுமார்    ஒரு கோடியே 20 இலட்சம்  ரூபா­வென மதிப்­பி­டப்­பட்­டுள்­ள­துடன், கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளிடம் தொடர்ந்து விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வரு­வ­தா­கவும் தெரி­வித்தார்.