ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்சி பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்­துள்ள நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை கார­ண­மாக தோல்­வி­யுற்று கட்­சி­யையும் அர­சாங்­கத்­தையும் அப­கீர்த்­திக்­குள்­ளாக்­காமல் தனது அமைச்சர் பத­வியை  அமைச்சர் ரவி கரு­ணா­ந­ாயக்க இரா­ஜினாமா செய்­வதே சிறந்­தது. இதற்­கான பணிப்பை பிர­தமர் வழங்­க­வேண்டும் என ஐ. தே. க. முக்­கி­யஸ்­தர்கள் பலர், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை சந்­தித்து வேண்­டுகோள் விடுத்­துள்­ளனர்.  இதே­வேளை, தனது பத­வியை இரா­ஜி­னாமா செய்­யாமல் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்கு அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க முகம் கொடுத்தால், அதற்கு ஆத­ர­வ­ளிக்கக் கூடா­தென்று உறு­தி­யான நிலைப்­பாட்டில் சஜித் பிரே­ம­தாச, ஹரீன் பெர்­னாண்டோ, இரான் விக்­கி­ர­ம­ரட்ண, ஹர்ஷ டீ சில்வா, அஜித் பீ  பெரேரா, நிரோஷன் பெரேரா உட்­பட மேலும் பல அமைச்­சர்கள், பிர­தி­ய­மைச்­சர்கள் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இருப்­ப­தாக தெரி­ய­வந்­துள்­ளது. 

ரவி கரு­ணா­நா­யக்க தனது பத­வி­யி­லி­ருந்து இரா­ஜி­னாமா செய்­யா­விட்டால், அவரை அமைச்சுப் பத­வி­யி­லி­ருந்து நீக்­கும்­படி ஜனா­தி­ப­தி­யிடம் நேர­டி­யாக வேண்­டுகோள் விடுக்­கவும் இக் குழு­வினர் தய­ராகி வரு­வ­தாக தெரி­ய­வ­ரு­கி­றது. இதே­வேளை இந்த விவ­காரம் குறித்து பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் நேரம் ஒதுக்கித் தரும்­படி சில ஐ.தே.கட்சி முக்­கி­யஸ்­தர்கள் கேட்­ட­போது, ரவி கரு­ணா­நா­யக்க ஜனா­தி­பதி ஆணைக்­குழு முன்னால் ஆஜ­ரான பின்னர் நேரம் ஒதுக்­கு­வ­தாக பிர­தமர் வாக்­கு­று­தி­ய­ளித்­தி­ருந்­த­மையும் குறிப்­பி­டத்­தக்­கது. 

ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்சி கடந்த 3 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை பாரா­ளு­மன்ற செய­லாளர் நாய­கத்­திடம் கைய­ளித்­துள்ள நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையில் ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சியைச் சேர்ந்த 32 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கைச்­சாத்­திட்­டுள்­ளனர். இருந்தும், முன்னாள் ஜனா­தி­ப­தியும் குரு­நாகல் மாவட்ட ஸ்ரீல.சு.கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ருமா மஹிந்த  ராஜபக் ஷ கைச்­சாத்­தி­ட­வில்­லை­யென்­பது  குறிப்­பி­டத்­தக்­கது. 

ரவி கரு­ணா­நா­யக்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்கு ஜே.வி.பி. ஆத­ர­வ­ளிக்­க­வுள்­ள­தாக அக்­கட்­சியின் பிர­சார செய­லாளர் விஜி­த­ஹேரத் எம்.பி தெரி­வித்­துள்ளார். 

இந்த நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்கு கட்­சியின் முடி­வின்­படி வாக்­க­ளிக்க வேண்­டு­மென ஐ.தே.க கட்சி வலி­யு­றுத்­தினால் பல ஐ.தே.கட்சி உறுப்­பி­னர்கள் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை விவா­தத்­துக்கு எடுத்­துக்­கொள்­ளப்­படும் தினத்­தன்று பாரா­ளு­மன்­றத்தை பகிஷ்­க­ரிக்­கவும் தீர்­மா­னித்­துள்­ள­தா­கவும் தெரி­ய­வ­ரு­கி­றது.     

இது இவ்­வா­றி­ருக்க ரவி கரு­ணா­நா­யக்­கவை அமைச்சுப் பத­வி­யி­லி­ருந்து இரா­ஜி­னாமா செய்­யும்­படி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அறி­வித்­துள்­ள­தாக அர­சாங்­கத்தின் நம்­பிக்­கை­யான தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. 

சுமத்­தப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டு­க­ளின்­படி ரவி கரு­ணா­நா­யக்க தொடர்ந்து அமைச்­ச­ரவை அமைச்­ச­ரா­க­வி­ருப்­பது அர­சாங்­கத்­துக்கும் அதேபோல் ரவி கரு­ணா­ந­யக்­க­வுக்கும் பெரும் பிரச்­சி­னையை ஏற்­ப­டுத்­து­மென ஜனா­தி­பதி அவ­ருக்கு அறி­வித்­துள்­ள­தா­கவும் அத்­த­க­வல்கள் மேலும் தெரி­விக்­கின்­றன. 

எனவே அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க அமைச்சுப் பதி­வி­யி­லி­ருந்து இரா­ஜி­னாமா செய்­வதே இதற்கு நல்ல தீர்­வாக அமை­யு­மெ­னவும் ஜனா­தி­பதி அவ­ருக்கு அறி­வித்­துள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 

பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க பாரா­ளு­மன்­றத்­துக்கு தெரி­வாகி 40 வரு­டங்கள் பூர்த்­தி­யா­வதை முன்­னிட்டு அமைச்­சர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­காக அல­ரி­மா­ளி­கையில் கடந்த 3 ஆம் திகதி இரவு நடை­பெற்ற இராப் போசன விருந்தின்போதே ஜனாதிபதி இவ்வாறு அறிவித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.  

இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  தன்னை பதவி விலகும்படி தெரிவித்ததாக வெளிவந்துள்ள  செய்திகளில்  எந்தவித உண்மையும்  இல்லையென வெளிவிவகார  அமைச்சர் ரவி கருணாநாயக்கா மறுப்புத் தெரிவித்துள்ளார். 

மேலும் தன்னை பதவி விலகும்படி ஜனாதிபதி கூறியதாக வந்த செய்திகள்  வதந்தி எனவும் அவை அர்த்தமற்ற செய்திகள் எனவும் அவர்  ஆங்கிலப் பத்தரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.