பெண் ஒருவரை மானபங்கம் செய்ததாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கமைய பிரபல பாடகர் யாஷ் வடாலி மேடையில் பாடிக்கொண்டிருக்கும் போது கைது செய்யப்பட்டார்.

மும்பையில்  யாஷ் வடாலியின் நண்பரின் பிறந்த நாள் விழா  கடந்த சில நாட்களக்கு முன் நடந்தது. அதில் கலந்து கொண்டு யாஷ் வடாலி பாடலொன்றை  பாடினார் அப்போது விழாவில் கலந்து கொண்டிருந்த 39 வயதுடைய பெண் ஒருவர் குறிப்பிட்ட பாடலை பாடும் படி கேட்க யாஷ் வடாலி அந்த கோரிக்கையை மறுத்துள்ளார். அதனால் இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்கு வாதத்தினால் ஆத்திரடமடைந்த யாஷ் வடாலி குறித்த பெண்ணை மானபங்கம் செய்ததாகவும் அதனால் அதிர்ச்சியடைந்த பெண் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து விசாரணை நடாத்தி வந்த பொலிஸார் ஓடிஸ்வரா பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் பாடிக்கொண்டிருந்த போது மேடையில் வைத்து யாஷ் வடாலியை கைது செய்துள்ளனர்.

மேலும் பொலிஸார் யாஷ் வடாலி மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.