காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் ஒன்றிணைந்து தமது உறவுகளை தம்மிடமே ஒப்படைக்கக்கோரி போராட்டங்களை முன்னெடுத்திருந்த நிலையில் இறுதியில்  வற்றாப்பளை கண்ணகி அம்மனிடம் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டு, பொங்கி படையலிட்டு, தேங்காய் உடைத்து, கதறியழுது வேண்டினர்.

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் ஒன்றிணைந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம்  150 ஆவது நாளை எட்டியுள்ளது.

தொடர்ந்து 150 நாட்களாக வீதியில் தமது உறவுகளை தம்மிடமே ஒப்படைக்கக்கோரி போராட்டத்தை முன்னெடுத்தபோதிலும் இதுவரை எந்தவித பதில்களும் கிடைக்காத நிலையில் நேற்றையதினம் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் புதுமைகள் நிறைந்த ஆலயமான வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு சென்று சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டதோடு பொங்கி படையலிட்டு தேங்காய் உடைத்து கண்ணீர் மல்க தமது உறவுகளை விரைவில் எம்மிடம் மீட்டு தா என கதறி அழுதனர்.

இதில் நூற்றுக்கணக்கான காணாமலாக்கப்பட்டவர்களின் தாய்மார்கள், மனைவி, பிள்ளைகள் என பலர் கலந்துகொண்டு வழிபாடுகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக படங்களுக்கு   http://www.virakesari.lk/collections/230