ஐக்­கிய தேசியக் கட்­சியின் மாநாட்டில் எடுத்­துக்­கொள்­ளப்­பட்ட தீர்­மா­னத்தின் பிர­காரம் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை இல்­லாமல் செய்­வ­தற்கு அவர் பெரும் பாடு­பட்டு வரு­கின்றார். அத்­துடன் 17 ஆவது திருத்த சட்­ட­மூ­லத்தின் ஊடாக சுயா­தீன ஆணைக்­கு­ழுக்­களை நிறு­வினார் என்று சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய தெரி­வித்தார். 

பாரா­ளுமன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை நடை­பெற்ற   பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் 40 வருட பாரா­ளு­மன்ற சேவைக்கு வாழ்த்து தெரி­விக்கும் பிரே­ர­ணையில் கலந்துகொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே  சபா­நா­யகர் மேற்­கண்­ட­வா­று­கு­றிப்­பிட்டார். 

சபா­நா­யகர் மேலும் குறிப்­பி­டு­கையில், 

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கும் எனக்கும் நெருங்­கிய தொடர்பு உள்­ளது. பிர­த­மரின் அழைப்­பினை ஏற்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் தவி­சாளர் பத­வியை   வகித்தேன். அவ­ரிடம்  காணப்­பட்ட பொறு­மையும் வெற்றி மற்றும் தோல்­வியை சக­ஜ­மாக கரு­து­வது  போன்ற குணாம்­சங்கள் தற்­போ­தைய அர­சி­யலில் ஈடு­படும் புதிய தலை­மு­றைக்கு முன்­னுதா­ர­ண­மாகும். அவ­ருடன்  இணைந்து நாட்டின் மறு­சீ­ர­மைப்­புக்­காக எடுத்த தீர்­மா­ன­மிக்க முடி­வுகள் தொடர்பில் எமக்கு நன்கு தெரியும். அவ­ருக்கு நாங்கள் ஒத்­து­ழைப்­பு­களை வழங்­கினோம். 1995 ஆம் ஆண்டு ஐக்­கிய தேசியக் கட்­சியின் மாநாட்டில் எடுத்­துக்­கொள்­ளப்­பட்ட தீர்­மா­னத்தின் பிர­காரம் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை இல்­லாமல் செய்­வ­தற்கு அவர் பெரும் பாடு­பட்டு வரு­கின்றார். அத்­துடன் 17 ஆவது திருத்த சட்­ட­மூ­லத் தின் ஊடாக சுயா­தீன ஆணைக்­கு­ழுக்­களை நிறு­வினார்.  தேர்தல் முறைமை மாற்றம் குறித்து அவர் எனக்கு பெரும் ஒத்­து­ழைப்­பு­க்களை வழங்­கினார். நாட்டின் ஜன­நா­ய­கத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு அவர் பெரும் சேவை­களை செய்தார். பாரா­ளு­மன்­றத்தில் பிர­தமர் கேள்வி, குழுக்கள் நிறு­வி­ய­மைக்கு அவரை நாம் பாராட்ட வேண்டும். எனவே நாட்­டுக்கு மேலும் சேவையை செய்ய பிரார்த்­தி­க்கின்றேன் என்றார்.  

அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்வா  உரை­யாற்­று­கையில், 

நான் 1988 ஆம் ஆண்டு பாரா­ளு­மன்­றத்­திற்கு வந்த போது ரணில் விக்­கி­ர­ம­சிங்க எம்­முடன் அன்­பான முறையில் பழ­குவார். அந்த காலப்­ப­கு­தியில் நாம் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு எதி­ராக பெரும் போராட்­டங்­களை முன்­னெ­டுத்தோம். ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ரா­கவும் பல விமர்­ச­னங்­களை முன்­வைத்தோம். எனினும் அவர் அனைத்­தையும் அமை­தி­யாக கேட்­டுக்­கொள்வார். வெளி­யே வந்த பின்னர் எம்­முடன் எந்­த­வொரு கோப உணர்வும் இல்­லாமல் அன்­பாக பழ­குவார். 

ஊட­கங்­களில் அதி­க­ளவில் விமர்­சிக்­கப்­பட்ட நபர் அவ­ராகும். அதன்­போதும் அவர் பொறு­மை­யாக இருந்தார். மேலும் ஜீ.எஸ்.பி.பிளஸ் சலு­கையை பெற்­றுக்­கொள்­வ­தற்கு அவரின் சர்­வ­தேச தொடர்பு எமக்கு பெரு­ம­ள­வில உத­வி­யது. ஆகவே அவரின் 40 வருட சேவைக்கு சுதந்­திரக் கட்சி சார்­பாக பாராட்­டு­க்களை தெரி­விக்­கின்றேன் என்றார்.

அமைச்சர்  கயந்த கரு­ணா­தி­லக்க  உரை­யாற்­று­கையில், 

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் 40 வருட சேவையை பாராட்டும் தரு­ணத்தில் ஜே.ஆர்.ஜய­வர்­தன ஆறில் ஐந்து பெரும்­பான்­மையை பெற்று ஐக்­கிய தேசியக் கட்­சியை வெற்றி அடைய செய்து 40 ஆண்­டுகள் ஆகின்­றன. முன்னாள் ஜனா­தி ­பதி ஜே.ஆர்.ஜய­வர்­தன தன்­னுடைய பிள்­ளை­க­ளையும் பேரன்­மார்­க­ளையும் அர­சி­ய­லுக்கு வர­வி­டாமல் தடுத்தார். எனினும் அவ­ரது பிள்­ளைகள் அர­சி­ய­லுக்கு வரா­வி­டினும் அவர் பல பிள்­ளை­களை வளர்த்­தெ­டுத்தார். 

அவர்­களில் ஒரு­வரே ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வாகும். ரணில் விக்­கி­ர­ம­சிங்க அதி­கா­ரத்தில் இருந்து ஓய்­வெ­டுக்கும் போது நாட்டின் நிலைமை தலை­கீ­ழாக மாறும். அதே நிலைமையை ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆட்­சிக்கு வந்­த­வுடன் நிலைமையை மறு­சீ­ர­மைத்து பல சாத­னை­களைக் கொண்ட ஆட்­சியை கொண்டு செல்வார். எனவே நாட்டின் வளர்ச்­சிக்கு ரணில் விக்­கி­ர­ம ­சிங்க உரிய நப­ராகும். எனவே அவர் மேலும் பல சேவை­களை செய்ய வாழ்த்­து­கின்றேன் என்றார்.