டிசம்பர் 10 ஆம் திக­திக்குள் உள்­ளூ­ராட்சி சபைத்­தேர்­தலை அர­சாங்கம் நடத்தும்

Published By: Priyatharshan

05 Aug, 2017 | 09:40 AM
image

இந்த மாத இறு­திக்குள் தேர்தல் திருத்த சட்­ட­மூலம் பாரா­ளு­மன்­றத்தில் அங்­கீ­க­ரிக்­கப்­படும் எனவும் டிசம்பர் மாதம் 10 ஆம் திக­திக்குள் உள்­ளூ­ராட்சி சபைத்­தேர்­தலை அர­சாங்கம் நடத்தும் எனவும் தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலை­வ­ரு­ட­னான சந்­திப்பில் ஆளும் கட்சி தெரி­வித்­துள்­ளது. 

மாகா­ண­சபை தேர்­தலை ஒரே நேரத்தில் நடத்தும் வேலைத்­திட்டம் தொடர்­பி­லான அறி­விப்பை பத்து நாட்­க­ளுக்குள் தெரி­விப்­ப­ தா­கவும் ஆளும் கட்சி  தேர்­தல்கள் ஆணைக் குழுவிடம் உறு­தி­ய­ளித்­துள்­ளது.  

நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சி சபை தேர்தல் மற்றும் மாகா­ண ­சபை தேர்தல் குறித்து அர­சியல் கட்­சி­களின்  செய­லா­ளர்கள் நேற்று தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலை­வரை சந்­தித்து பேச்­சு­வா­ர்த்தை நடத்­தி­யி­ருந்­தனர். 

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி, ஐக்­கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு, மக்கள் விடு­தலை முன்­னணி, தேசிய சுதந்­திர முன்­னணி, ஈழ மக்கள் ஜன­நா­யக கட்சி, ஜாதிக ஹெல உறு­மய,  மக்கள் விடு­தலை முன்­னணி  உள்­ளிட்ட கட்­சி­களின் பிர­தி­நி­திகள்  நேற்று இந்த சந்­திப்பில் கலந்­து­கொண்­டனர். நேற்று பிற்­பகல் மூன்று மணிக்கு ஆரம்­பிக்­கப்­பட்ட இந்த சந்­திப்பு சுமார் ஒன்­றரை மணித்­தி­யா­லங்கள் இடம்­பெற்­றது.

இந்த சந்­திப்பின் போது  நடை­பெ­ற­வுள்ள  தேர்­தல்கள் குறித்து   பொது இணக்­கப்­பாட்டின் அடிப்­ப­டையில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது.  குறிப்­பாக அடுத்­த­தாக நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சி சபைத்­தேர்­தலை பொறுத்­த­வ­ரையில் இனியும் காலத்தை கடத்­தாது உட­ன­டி­யாக தேர்தல் தினம் அறி­விக்­கப்­பட வேண்டும் என சந்­திப்பில் கலந்­து­கொண்ட கட்­சி­களின் பிர­தி­நி­திகள் தெரி­வித்­தனர். 

எவ்­வாறு இருப்­பினும் இந்த ஆண்டு டிசம் பர் மாதம் பத்தாம் திக­திக்கு முன்னர் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலை நடத்­து­வ­தற்கு அர­சாங்கம் சகல நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுக்கும் என ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி மற்றும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் பிர­தி­நி­திகள் வாக்­கு­று­தி­ய­ளித்­துள்­ளனர். இந்த மாதம் 31 ஆம் திக திக்கு முன்னர் தேர்தல் திருத்த சட்­ட­மூலம் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­படும். அர­சாங்கம் இந்த விட­யத்தில் கால தாம­தத்தை ஏற்­ப­டுத்­தாது என பிர­தி­ய­மைச்­சர்­க­ளான அஜித் பெரேரா, லசந்த அழ­கி­ய­வண்ண ஆகியோர்  சந்­திப்­பின்­போது  தெரி­வித்­துள்­ளனர்.  

 மூன்று மாகா­ண­ச­பை­களின்    கால எல்லை செப்­டெம்பர் மற்றும் ஒக்­டோபர் மாதங்­களில் முடி­வுக்கு வரு­கின்­றது. இது குறித்து  நேற்­றைய சந்­திப்பில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது. கிழக்கு மாகாணம், சப்­ர­க­முவ மாகாணம் மற்றும் வடமேல் மாகா­ணங்­களின் கால எல்லை முடி­வ­டை­கின்ற நிலையில் குறித்த மாகாண சபை­க­ளுக்­கான தேர்­தலை நடத்­து­வ­தா

அல்­லது சகல மாகா­ண­ ச­பை­களின்  தேர்­த­ல்களையும் ஒரேநேரத்தில் நடத்­து­வதா என இதன்­போது கட்சி பிர­தி­நி­தி­க­ளினால் வின­வப்­பட்­டது. இதன்­போது சகல மாகா­ண ­சபை தேர்­த­ல்களையும் ஒரே தினத்தில் நடத்­து­வது  என்ற நிலைப்­பாட்டில் அர­சாங்கம் உள்­ள­தா­கவும் இந்த விடயம் தொடர்பில் அடுத்த பத்து நாட்க­ளுக்குள் அறி­விக்­கப்­படும் எனவும் பிர­தான கட்­சி­களின் உறுப்­பி­னர்கள் தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலை­வ­ரிடம் தெரி­வித்­துள்­ளனர். 

இந்­நி­லையில் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்தல்  சட்­ட­மூ­லத்தை குறித்த தினத்தில் அங்­கீ­க­ரிக்க வேண்டும். இந்த சட்­ட­மூலம் சமர்ப்­பிக்கும் தினம் செப்­டெம்பர் வரையில் இழுத்­த­டிக்­கப்­படும் என்றால் இந்த ஆண்டு இறு­திக்குள் தேர்தலை நடத்தவே முடியாது. டிசம்பர் மாதம் சாதாரண தரப்பரீட்சை நடை பெறும் காரணத்தினால் அந்தக் காலப்பகுதியில் தேர் தலை நடத்த இயலாது. அவ்வாறான நிலையில் அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் தேர்தலை நடத்தவேண்டிய நிலைமை வரும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்  மஹிந்த தேசப்பிரிய  கட்சி செயலாளர்களு டனான சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04