நாட்டில் நிலவும் கடு­மை­யான வரட்சி கார­ண­மாக இனி­வரும் காலங்­களில் மின்­வ­ழங்­கலில் கடு­மை­யான கட்­டுப்­பாடு ஏற்­படும் என்றும் இயற்கை வாயு மின்­நி­லை­யத்தை உட­ன­டி­யாக அமைக்­கா­விடில் நாட்டு மக்கள் பாதிப்­ப­டை­ய­கூடும் எனவும் மூலோ­பாய தொழில்­மு­யற்சி முகா­மைத்­துவ நிறு­வ­னத்தின் தலைவர் அசோக அப­ய­கு­ண­வர்­தன தெரி­வித்தார்.

இலங்­கையில் நிலவும் வரட்­சி­யினால் ஏற்­படும் பிரச்­சி­னைகள் மற்றும் தீர்­வுகள் தொடர்பில் தெளி­வுப்­ப­டுத்தும் ஊட­க­வி­ய­ளாளர் மாநாடு கொழும்பில் அமைந்­துள்ள தொழில்­மு­யற்சி முகா­மைத்­துவ நிறு­வ­னத்தில் நேற்று நடை­பெற்­றது. அதில் உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.  

இதன்­போது அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

மின்­சார நெருக்­கடி தற்­போதே ஆரம்­பித்­து­விட்­டது. அவ­சர நிலையில் கூடு­த­லான விலைக்கு மின்­சா­ரத்தை கொள்­வ­னவு செய்­ய­வேண்­டிய நிலை தற்­போது அர­சாங்­கத்­துக்கு  ஏற்­பட்­டுள்­ளது.  

 இலங்கை மின்­சார சபை 2017 ஆம் ஆண்டு தொடக்கம் செப்­டம்பர் மாத காலப்­ப­கு­திக்குள் 76.4 கிகாவோட் மின்­சா­ரத்தை கொள்­வ­னவு செய்ய திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. மின்­சா­ரத்தை கொள்­வ­னவு செய்யும் அல­கொன்றின் சாதா­ரண விலை கிலோவோட் மணித்­தி­யா­லத்­துக்கு ரூ. 40.48 ஆக கணக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது. மேலும் அவ­சர நிலை­மையின் கீழ் மின்­சார நிலை­யங்­களில் மின்­சா­ரத்தை கொள்­வ­னவு செய்­தாலும் இல்­லா­விட்­டாலும் மூல­தன செல­வாக மாதத்­திற்கு 210 மில்­லியன் ரூபாய்கள் அவ் தனியார் நிறு­வ­னங்­க­ளுக்கு செலுத்த வேண்டும். அதன் சுமை இறு­தியில் மின் பாவ­னை­யா­ளர்­க­ளுக்கே சுமத்­தப்­படும்.   

நாட்டில் நிலவும் வரட்சி கார­ண­மாக மின்­சார பற்­றாக்­குறை ஏற்­பட்­டுள்­ளது. 2012 பின்னர்  மின் உற்­பத்தி பிர­தே­சங்­களில் குறைந்த நீர் அளவே காணப்­ப­டு­கின்­றது என தர­வி­டப்­பட்­டுள்­ளது. தற்­போது நீர்த்­தேக்­கங்­களில் 450 கிகாவோட்  காணப்­ப­டு­கின்­றது. அவ்­வா­றாயின்  நீர்த்­தேக்­கங்­களின் மொத்த கொள்­ள­ளவு 35 சத­வீதம் ஆகும். அடுத்து மழை வரும் வரை இந் நீரை மிகக் கவ­ன­மாக பாது­காக்க வேண்டும். அதனால் சிறு பிரச்­சினை ஏற்­பட்­டாலும் சபை மின் வெட்டை மேற்­கொள்ள நேரி­டு­கின்­றது. கனி­ய­எண்ணெய் வழங்கல் தடைப்­பட்டால் மின் வெட்டு மேற்­கொள்ள நேரி­டு­கின்­றது. 

ஏற்­க­னவே புத்­த­ளத்தில் 300 மெகாவோட் செயற்­பட்டில் இல்லை. அதனால் கேள்வி சிறி­தாக அதி­க­ரித்­தாலும் மின் கட்­ட­மைப்பு சீர்­கு­லை­வதை தடுப்­ப­தற்­காக மின்­சா­ரத்தை துண்­டிக்க நேரி­டு­கின்­றது. இதனால் தற்­போது எடுக்­கப்­பட்­டுள்ள அவ­சர மின்­உற்­பத்தி நிலை­யங்­களும்  போதாது என்­பது தெளி­வா­கின்­றது.  மின்­சா­ரத்­துக்­கான கேள்வி தற்­போது 5 தச­வீதம் வரையில் அதி­க­ரித்­த­மையால் நிலைமை மிகவும் மோச­ம­டையும். 

அதனால் 2018 ஆம் ஆண்டு முதற் காலாண்டில்; வரட்சி காலம் ஆரம்­பித்­ததும் அதி­க­ளவில் தனியார் துறை­யி­ட­மி­ருந்து அவ­ச­ர­மாக கனி­ய­எண்ணெய் மின்­சா­ரத்தை அர­சாங்கம் உயர்­வி­லைக்கு கொள்­வ­னவு செய்ய நேரிடும். நீண்­ட­கால மின்­உற்­பத்தி நிலை­யங்­களை உரு­வாக்­கு­வ­தற்கு இன்னும் அடிக்கல் கூட நாட்­டப்­ப­ட­வில்லை. அதனால் 2020  ஆம் ஆண்டின் வரட்சி காலங்­களில் இந்­நி­லைமை மோச­ம­டையும். புதிய மின்­உற்­பத்தி நிலை­யங்­களை உரு­வாக்கும் வரை இந்­நி­லைமை உக்­கி­ர­மாக காணப்­ப­டு­மே­யன்றி குறை­வ­டை­யாது. உரு­வா­கி­யுள்ள கனி­ய­எண்ணெய் மாபியா வெற்றி பெறும் கால­மாகும். மின் பாவ­னை­யா­ளர்கள் ஒப்­பாரி வைக்கும் நேர­மாகும்.  

வரு­டாந்தம் அதி­க­ரித்­து­வரும் மின்­சார கேள்­வியை பூர்த்தி செய்­வ­தற்­காக மின்­சார சபையால் புதி­தாக நீண்­ட­கால மின்­உற்­பத்தி நிலை­யங்­களை உரு­வாக்க முடி­யா­மையே இந்­நி­லை­மைக்கு கார­ண­மாகும். புத்­தளம் நிலக்­கரி அனல்மின் நிலை­யத்தின் பின் கட்­ட­மைப்பில் திட்­ட­மிட்ட ரீதி­யான  நீண்­ட­கால மின்­உற்­பத்தி நிலையம் எதுவும் கட்­ட­மைப்பில் சேர்க்­கப்­ப­ட­வில்லை. சம்­பூரில் 500 மெகாவோட் அனல்மின் நிலை­யைத்தை உரு­வாக்­கு­வ­தற்கே பல தசாப்­தங்­க­ளாக மின்­சார சபை முன்­மொ­ழிந்­தி­ருந்­தது. 

அரசின் மின்­சக்தி கொள்­கைக்கு மாறாக அதனை அமைக்க முடி­யாமல் போனது. அரசின் கொள்­கைகள் தெளி­வா­னவை. 2030 ஆம் ஆண்­ட­ளவில் உள்­நாட்டு மின்­உற்­பத்தி வளங்கள் மூலம் சூழல் நேய மின்­சா­ரத்தை உற்­பத்தி செய்­வது அரசின் கொள்­கை­யாகும். அதற்கு மாறான பெரும்­பாலும் இலங்­கையில் இல்­லாத சூழ­லுக்கு மிகவும் மோச­மான நிலக்­கரி மின் உற்­பத்தி செய்­வ­தற்­காக நிலை­யங்­களை உரு­வாக்கும் திட்­ட­மி­ட­லையே மின்­சார சபை இது­வரை காலமும் மேற்­கொண்­டது. 

அதற்கு நிலக்­கரி இலா­ப­மா­னது என மின்­சா­ர­சபை நீண்ட கால­மாக சொல்­கி­றது. ஆனால் மின்­சார சபையின் அத்­தர்க்கம் பிழை­யா­னது என்­பதை அண்­மையில் இலங்கை பொது பயன்­பாட்டு ஆணைக்­கு­ழுவின் ஆய்வின் மூலம் அரசு புரிந்­து­கொண்­டது. தற்­போது நிலக்­க­ரியை விடவும் இயற்கை வாயு மற்றும் புதுப்­பிக்­கத்­தக்க மின் உற்­பத்தி நிலை­யங்கள் இலா­ப­மா­னது என்­பது தெரிய வரு­கின்­றது. என்­றாலும் இந்த யதார்த்தை ஏற்­றுக்­கொண்டு நாட்டை விபத்­தி­லி­ருந்து விடு­விப்­ப­தற்கு மின்­சார சபை நட­வ­டிக்கை மேற்­கொள்­ள­வில்லை. 

மின்­சார நெருக்­க­டிக்கு உட­னடி குறு­கிய கால மற்றும் நீண்ட கால தீர்வு புதுப்­பிக்­கத்­தக்க வலு­சக்தி, மற்றும் வலு­சக்தி முகா­மைத்­து­வமும் ஆகும். இயற்கை வாயு அனல்­மின்­நி­லை­யத்தை உரு­வாக்­கு­வதல் இடைக்­கால தீர்­வாகும். 

ஏற்­பட்­டு­வரும் வரட்­சிக்கு முகம் கொடுப்­ப­தற்கு உட­னடி வலு­சக்தி தேவை­யாகும். அதில்  வலு­சக்­தியை சிக்­க­ன­மாக பயன்­ப­டுத்­து­வதே உட­னடி தீர்­வாகும். மிகவும் வினைத்­திறன் கூடிய மின் உப­க­ர­ணங்­களை பயன்­ப­டுத்­துதல். அவ் வினைத்­திறன் மிக்க மின் உப­க­ர­ணங்­க­ளுக்­காக விசேட சலு­கை­களை வழங்க அரசு கவனம் எடுக்க வேண்டும்.  

இனி­வரும் மூன்­றாண்­டு­க­ளுக்குள் மேதி­க­மாக 1000 கிகாவோட் மணித்­தி­யா­லங்கள் என்­ற­வாறு கட்­ட­மைப்பில் சேர்த்­துக்­கொள்­ளப்­பட வேண்டும். அந்த மின்­நி­லை­யங்­களை உரு­வாக்­கு­வ­தற்­காக காலம் இல்லை என்­பதால் அதன் தேவை நிலக்­கரி அனல் மின்­நி­லை­யங்­க­ளி­லி­ருந்தோ, இயற்கை  வாயு மின்­நி­லை­யங்­களில் பெற்­றுக்­கொள்­ளப்­பட  முடி­யாது. கனி­ய­எண்ணெய் நிலை­யங்கள் மூலம் அந்த தேவை­களை பூர்த்தி செய்ய முயன்­றாலும் அது செலவு அதி­க­மா­ன­தாகும். குறு­கிய காலத்­துக்கு மாத்­திரம் அவ்­வா­றான மின்­நி­லை­யங்­களை உரு­வாக்­கு­வ­தற்கு நேரி­டு­கையில் அவற்­றுக்­கான முத­லீடு வீணா­கின்­றது. 

அதனால் இதற்­கான குறு­கிய காலத்தில் உள்ள நல்ல தீர்வைப் பெறு­வ­தாயின் அது புதுப்­பிக்­கத்­தக்க வலு­சக்­தியை விரை­வாக அபி­வி­ருத்தி செய்ய வேண்டும். அந்த தேவையை சூரிய மின்நிலையங்களில் மாத்திரமே பெற்றுக் கொள்ள முடியும். வருடாந்தம் 700 மெகாவேட் படி சேர்க்க முடியும். காற்று மின்நிலையங்களில் மாத்திரம் 400 மெகாவேட் வருடாந்தம் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். விறகு மின்சாரமாயின் 200 மெகாவோட் படி வருடாந்தம் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். 

 அனைத்து புதுப்பிக்கத்தக்க திட்டங்களை அபிவிருத்தி  செய்வதற்காக விரைவான வேலைத்திட்டத்தை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறே புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மின்சார முறைமைக்கு பதிலீடு மேற்கொள்வற்காக 2020 ஆம் ஆண்டு உச்சத்தில் அதிகரித்துவரும் கேள்வியை பூர்த்தி செய்வதற்காக இச்சந்தர்ப்பத்தில் இயற்கை வாயு மின்நிலையத்தை உருவாக்குவதே தீர்வாகும்.