புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்கும் செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்ற நிலையில் தேசிய இனப்­பி­ரச்­சினைத் தீர்­வுக்­காக முழு­மை­யான ஒத்­து­ழைப்­புக்­களை வழங்­கு­வதே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு நாம் செய்யும் நன்­றிக்­கடன் என அமைச்சர் மனோ­க­ணேசன் சபை யில் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை நடை­பெற்ற பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் நாற்­ப­தாண்டு கால பாரா­மன்ற அர­சியல் வாழ்க்கை நிறை­வை­யொட்டி வாழ்த்­துக்­களைத் தெரி­விக்கும் பிரே­ரணை மீது உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நாற்­பது ஆண்­டு­களை தனது அர­சியல் வாழ்க்­கையில் பூர்த்தி செய்­கின்றார். அவ­ருக்கு எமது கட்­சி­யான தமிழ் முற்­போக்கு கூட்­டணி சார்­பிலும் மக்கள் சார்­பிலும் வாழ்த்­துக்­களை தெரி­வித்­துக்­கொள்­கின்றேன்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தனது அர­சியல் வாழ்க்­கையில் கல்­வியில் நாட்டை முன்­னேற்­று­வது. இளை­ஞர்­களை மேம்­ப­டுத்­து­வது ஆகிய இரண்டு விட­யங்­களில் அதி­தீ­வி­ர­மாக செயற்­பட்­ட­தோடு பல்­வேறு திட்­டங்­க­ளையும் நடை­மு­றைப்­ப­டுத்­தி­யி­ருந்தார்.

கல்­வித்­து­றையைப் பொறுத்­த­வ­ரையில் தொழில்­நுட்பம், கணனி, ஆங்­கிலம் ஆகி­ய­வற்றை மையப்­ப­டுத்தி எதிர்­கா­லத்­தினை கருத்­திற்­கொண்டு கல்­விக்­கொள்­கை­களை வகுத்­தி­ருந்தார்.

ஒரு­நாட்டின் இளை­ஞர்கள் தூங்­கு­கின்­றார்கள் என்றால் அந்த நாட்டு பின்­நோக்­கியே செல்­வ­தாக அமையும். இளை­ஞர்கள் விழித்­தி­ருக்­கின்­றார்கள் என்றால் அந்த நாடு முன்­னோக்கிச் சென்­று­கொண்­டி­ருக்­கின்­றது என்று அர்த்­தப்­படும். அதற்­க­மை­வாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை  இளைஞர் மன்­றத்தின் பிதா என்று கௌர­வப்­ப­டுத்­தலாம். 

இளைஞர் மன்­றத்­தினை ஆரம்­பித்து இளைஞர் முகாம்­களை திட்­ட­மிட்டு நடத்­தி­வந்­த­தோடு விளை­யாட்­டுத்­து­றை­யையும் பாட­சாலை மட்­டத்­தி­லி­ருந்து முன்­னேற்றி வந்­தி­ருந்தார். இவை­யெல்லாம் பிர­த­மரின்  எதிர்­காலம் குறித்த தூர­நோக்­கான சிந்­த­னையின் வெளிப்­பா­டா­கவே கரு­த­வேண்­டி­யுள்­ளது.

மேலும் பிர­த­ம­ருக்கும் எனக்கும் இடையில் அர­சியல் ரீதி­யாக பல தொடர்­புகள் காணப்­ப­டு­கின்­றன. இந்­தச்­சந்­தர்ப்­பத்தில் 2010ஆம் ஆண்டு நடை­பெற்ற விட­ய­மொன்றை இங்கு நினைவு கூரு­கின்றேன். 

2010ஆம் ஆண்டு ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக சரத் பொன்­சே­காவை ஆத­ரித்து நாங்கள் தீவி­ர­மான பிர­சா­ரத்­தினை மேற்­கொண்­டி­ருந்த தரு­ணத்தில் வலப்­பனை கூட்­டத்­தினை நிறைவு செய்­து­விட்டு நோர்வூட் நோக்கிச் வாக­னத்தில் சென்று கொண்­டி­ருந்­த­போது பிர­த­மரும் என்­னுடன் வாக­னத்தில் பய­ணித்­துக்­கொண்­டி­ருந்தார். அச்­ச­ம­யத்தில் ஜெயலத் ஜெய­வர்த்­த­னவும் இருந்தார்.

அப்­போது  மலை­ய­கத்தில் உள்ள எமது மக்­களின் குடி­யி­ருப்­புக்­களை பார்த்து ஒரு விட­யத்­தினை கூறினார். இவர்கள் உய­ரத்தில் தோட்­டங்­க­ளுக்குள் இருப்­பதன்  கார­ணத்தால் தான் தேசிய நீரோட்­டத்­தி­லி­ருந்து அந்­நி­யப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றார்கள்.  இவர்­க­ளுக்கு தனி­யான வீடு­களை வீதி­யோ­ரங்­களில் அமைப்­பதன் ஊடாக தேசிய நீரோட்­டத்தில் அவர்­களை இணைத்­துக்­கொள்ள முடியும். இது எனது கனவு. எமது ஆட்சி வந்­த­வுடன் அதனை நிச்­சயம் செய்வோம் என்று கூறி­ய­துடன்  அதன் பின்னர் அந்த மக்கள் சிங்­கள வேட்­பா­ள­ருக்கே வாக்­க­ளிப்­பார்கள். உங்­க­ளுக்கு வாக்­க­ளிக்க மாட்­டார்கள் என்றும் நகைச்­சு­வை­யாகக் கூறினார்.

அதன்­போது நான், பர­வா­யில்லை. அவ்­வா­றான இன அடை­யா­ள­மற்ற சூழ­லொன்று ஏற்­ப­டு­வ­தையே நாமும் விரும்­பு­கின்றோம். அவ்­வா­றா­ன­தொரு ஜன­நா­யகச் சூழல் உரு­வாக்­கப்­ப­ட­வேண்டும் என்­பதே எமது நோக்­க­மு­மாகும் என்று குறிப்­பிட்­டி­ருந்தேன். 

மேலும் இனப்­பி­ரச்­சி­னைக்கு பேச்­சு­வார்த்­தை­யூ­டா­கவே தீர்வு காணப்­ப­ட­வேண்டும் என்­பதில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உறு­தி­யுடன் இருந்தார். இதன் கார­ண­மா­கவே விடு­த­லைப்­பு­லி­க­ளுடன் சமா­தான உடன்­ப­டிக்­கையைச் செய்து  , ஒஸ்­லோ­விலும் பேச்­சுக்­களை நடத்­தினார்.

துர­திஸ்­ட­வ­ச­மாக அவை வெற்­றி­ய­ளிக்­காது போயின. யுத்தம் நடை­பெற்று நிறை­வுக்கு வந்­தது. அதன் பின்னர் யுத்த வெற்­றியை அள­வுக்கு அதி­க­மாக பிர­சாரம் செய்­தனர். 

விடு­த­லைப்­பு­லி­களின் தோல்­வியை முழு தமிழ் மக்கள் அடைந்த தோல்­வி­யாக சித்­த­ரிப்­புகள் எழுந்­த­போது அவ்­வா­றான நிலைமை ஏற்­ப­டக்­கூ­டாது என்­பதில் பிர­தமர் குறி­யாக இருந்தார். யுத்­த­வெற்றி தமிழ் மக்­க­ளுக்கு எதி­ரான வெற்றி என்ற நோக்கு இருக்க கூடாது என்­பதில் அவர் உறு­தி­யுடன் இருந்தார்.

அது­மட்­டு­மன்றி கடந்த கால காட்­டாட்­சியை மாற்ற வேண்டும் என்று நாம் ஒன்­றாக போரா­டினோம். சுதந்­தி­ரத்­திற்­கான மேடை, மக்கள் கண்­கா­ணிப்­புக்­குழு, எதிர்க்­கட்­சி­களின் எதிர்ப்பு, ஒற்­றுமை இயக்கம் என்று பிர­த­ம­ருடன் இணைந்து வெள்ளை வான் கடத்­தல்கள், காணா­ம­லாக்­கப்­ப­டுதல் போன்ற ஜன­நா­ய­கத்­தினை ஒழிக்கும் செயற்­பா­டு­க­ளுக்கு எதி­ராக குரல்­கொ­டுத்து ஆட்­சியை மாற்­றினோம்.

அதே­நேரம் பிர­த­மரின் நிதானம், பொறுமை, கொடுத்த வாக்­கு­று­தியை காப்­பாற்றும் தன்மை போன்ற பண்­புகள் அவ­ரி­டத்­தி­லி­ருந்து நாம் பெற்­றுக்­கொண்ட மிகச்­சி­றந்த படிப்­பி­னை­க­ளாக அமை­கின்­றன. தற்­போது புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்­கு­வ­தற்­கான செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றன. 

பிரதமருடைய தலைமையிலே வழிநடத்தல் குழுவில் நாம் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம். வழிநடத்தல்குழு அரசாங்கத்தினை மட்டும் மையப்படுத்திய குழுவல்ல. அதில் அனைத்துக் கட்சியின் உறுப்பினர்களும் இருக்கின்றார்கள்.

தேசிய இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தையூடாக தீர்வு காணப்படவேண்டும் என்பது பிரதமரின் நீண்டகால இலக்கு. அதற்கான சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டுள்ளது. தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண்பதற்காக நாம் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதுவே நான்கு தசாப்த அரசியல் வாழ்வை  நிறைவு செய்துள்ள  நட்சத்திரத்திற்கு நாம் செய்யும் நன்றிக்கடனாகும் என்றார்.