வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் இன்று மாலை 4 மணியளவில் வவுனியாவிலிருந்து பயணிகளுடன் பயணித்த வவுனியா-மெனிக்பாமிற்கான அரச பேருந்து ஒன்று  புகையிரத கடவையை கடக்க முயன்ற வேளையில் மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கி பயணித்து கொண்டிருந்த புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மேலும் இவ்விபத்தில் பேருந்தின் சாரதி உட்பட 6 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் செட்டிகுளம் வைத்தியசாலைக்கு எடுத்தச் செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த புகையிரதக் கடவையானது பாதுகாப்பற்ற புகையிரத கடவை என அப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இவ் விபத்துத் தொடர்பில் செட்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.