நுவரெலிய பெலிஹுல் ஓயாவில் குதித்து இளம் காதல் ஜோடியினர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

நுவரெலிய மதுரட பிரதேசத்தில் உள்ள மெரபா விகாரையின் அருகிலுள்ள பெலிஹுல் ஓயாவில் குதித்து காதலர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் எனவும் தற்கொலைக்கான காரணம் இது வரை அறியப்படவில்லை என்றும் நுவரெலிய பொலிஸார் தெரிவித்தனர்.

18 வயது இளைஞர் மற்றும் 15 வயதுடைய சிறுமியே ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

குறித்த இளம் காதல் ஜோடியின் தற்கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.