யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரிக்குப் பின்புறமாகவுள்ள புகையிரதக் கடவையில் சற்றுமுன்னர் விபத்தொன்று இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியார் தெரிவித்தார்.

குறித்த புகையிரதக்கடவையை பெண் மருத்துவர் ஒருவர் காரில் கடக்க முயன்ற போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

எவ்வாறாயினும் விபத்தில் கார் பலத்த சேதமடைந்துள்ள நிலையிலும் காரைச் செலுத்திச்சென்ற 40 வயதுடைய பெண் மருத்துவரான கிரிஷாந்தி என்பவர் எவ்வித பாதிப்புளுமின்றி தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளார்.

வீதியின் இரு மருங்கிலும் இருந்த புகையிரத்கடவை பழுதடைந்த போதிலும் கடமையில் இருந்த புகையிரதக்கடவை ஊழியர் புகையிரதக் கடவையை கடக்கும் வாகனங்களை கொடியினைக்காட்டி கையால் மறித்தே கடமையிலீடுபடுவதாகவும் புகையிரதக்கடவை தொடர்பில் பலமுறை முறையிட்டபோதும் திருத்திக்கொடுக்கபடவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

இவ் விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.