சட்டவிரோதமான முறையில் மீன் பிடியில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகப்படும்  5 படகுகளை இன்று காலை 10 மணியளவில் மட்டக்களப்பில் வைத்து இலங்கை கடற் படையினர் கைப்பற்றியுள்ளனர் .

இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் மட்டக்களப்பு வாவியும் கடலும் சங்கமிக்கும் இடமான ஆத்துவாய் என அழைக்கப்படும் இடத்தில் வைத்தே குறித்த 5 படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த படகில் சட்ட விரோதமான  சுருக்கு வலை இருந்த சந்தேகத்திலேயே இந்த படகுகளையும் தொழிலாளர்களையும் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .

இது தொடர்பாக மட்டக்களப்பு கடற்தொழில் திணைக்களத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது, 

குறித்த சம்பவம் தொடர்பாக கடற்படை 5 படகுகளை கைப்பறியுள்ளதாகவும் தங்களது அதிகாரிகள் குறித்த இடத்துக்கு சென்றுள்ளதாவும் தெரிவித்துள்ளனர் .