தனது வீட்டில் குறு­கிய நேரத்­துக்கு தனித்த விடப்­பட்ட 4 வயது பாலகனொருவன் தவ­று­த­லாக துப்­பாக்­கியால் தன்னைத் தானே சுட்டு உயி­ரி­ழந்த விப­ரீத சம்­பவம் அமெ­ரிக்க லாஸ் வெகாஸ் பிராந்­தி­யத்தில் இடம்­பெற்­றுள்­ளது. 

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை  பிற்­பகல் இடம்­பெற்ற இந்த சம்­பவம் குறித்து சர்­வ­தேச ஊட­கங்கள் நேற்று  வியா­ழக்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.

 சம்­பவ தினம்   வீட்­டி­லி­ருந்த  அந்தப் பால­க­னது 7  வயது சகோ­த­ரனும்  தந்­தையும் பாட்­டாவும் அந்த பால­கனை சிறிது நேரம் தனி­யாக விட்டு விட்டு  வெளியில் சென்ற வேளை அவன்  வீட்­டி­லி­ருந்த ரவைகள் நிரப்­பப்­பட்ட துப்­பாக்­கியை பற்­றி­யெ­டுத்­துள்ளான். 

இதன்­போது துப்­பாக்கி தவ­று­த­லாக வெடித்­ததால்   பாலகன்  படு­கா­ய­ம­டைந்­துள்ளான். தொடர்ந்து மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு செல்­லப்­பட்ட அவன் சிகிச்சை பல­ன­ளிக்­காத நிலையில்  45  நிமி­டங்கள் கழித்து உயி­ரி­ழந்­துள்ளான். இந்நிலையில்  மேற்படி சம்பவம் தொடர்பில் பிராந்திய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.