தன்னை சின­மூட்­டிய சுற்­றுலாப் பய­ணியை தனது புக­லி­டத்­துக்குள் இழுத்துச் சென்று கடித்துக் குத­றிய கரடி

Published By: Raam

04 Aug, 2017 | 11:35 AM
image

தன்னை  சின­மூட்­டிய சுற்­றுலாப் பய­ணியை கர­டி­யொன்று தனது புக­லி­டத்­துக்குள் இழுத்துச் சென்று கடித்துக் குத­றிய சம்­பவம் தாய்­லாந்தில் இடம்­பெற்­றுள்­ளது.

எனினும்  அந்த சுற்­றுலாப் பயணி அதி­ச­யிக்­கத்­தக்க வகையில்  உயிர் தப்­பி­யுள்ளார்.

பெட்­சபன் மாகா­ணத்­தி­லுள்ள ஆல­ய­மொன்­றி­லி­ருந்த  கர­டிகள் புக­லி­டத்தைப் பார்­வை­யிடச் சென்ற  நயிபம் புரொம்­ரேரி (36  வயது)   என்ற மேற்­படி சுற்­று­லாப்­ப­யணி  கயிறு ஒன்றைப் பயன்­ப­டுத்தி  சோற்றைக் கொண்ட சட்­டி­யொன்றை  குறிப்­பிட்ட கர­டியின் புக­லி­ட­மான  பள்­ளத்தில் இறக்­கி­யுள்ளார். 

இதன்­போது அந்தக் கரடி சோற்றை  உண்ண வரவும் அவர்  சோற்று சட்­டியை அங்கும் இங்கும் அசைத்து  சோற்றுச் சட்­டிக்­காக அந்தக் கரடி  அலைந்து திரி­வதை தனது நண்­பர்­க­ளுக்கு வேடிக்கை காட்டும் முயற்­சியில் ஈடு­பட்­டுள்ளார்.. 

இந்­நி­லையில் கடும் பசி­யுடன் இருந்த கரடி  ஒரு கட்­டத்தில் சின­ம­டைந்து  தனது பின்­னங்­கால்­களால்  எழுந்து நின்று  நயிபம் புரொம்­ரே­ரியை தாவிப் பிடித்து பள்­ளத்­திற்குள் இழுத்­துள்­ளது.

கர­டியின் திடீர் தாக்­கு­தலால் நயிபம் புரொம்­ரேரி மயக்க நிலைக்கு செல்­லவும் கரடி அவரைக் கடிக்க  ஆரம்­பித்­துள்­ளது. 

இதனால் அதிர்ச்­சி­ய­டைந்த  அவ­ரது நண்­பர்கள்  கரடி மீது தடி­களை வீசியும் குளிர் நீரை ஊற்­றியும் அதனை அங்­கி­ருந்து பின்­வாங்கச் செய்யும் முயற்­சியில் ஈடு­பட்­டனர்.  ஆனால் அவர்­க­ளது  அந்த முயற்­சிக்கு பலன் கிடைக்­க­வில்லை.

கரடி  நயிபம் புரொம்­ரே­ரியின் சதைப் பகு­தியை தனது வாயால் கௌவி அவரை அங்கும் இங்கும் இழுத்துச் செல்ல ஆரம்­பித்­தது.

இந்­நி­லையில் வேறு வழி தெரி­யாத  அங்­கி­ருந்த சிலர்,  கர­டியின் புக­லி­ட­மான பள்­ளத்­துக்குள்   இறங்கி  கம்­புகள் மற்றும் தடி­களால் கர­டியை நேர­டி­யாக தாக்­கவும் அந்தக் கரடி நயிபம் புரொம்­ரே­ரிiயை விட்டு  பின்­வாங்க ஆரம்­பித்­தது.  

இத­னை­ய­டுத்து  துரி­த­மாக செயற்­பட்ட நயிபம் புரொம்­ரே­ரியின் நண்­பர்கள் மயங்கிக் கிடந்த அவரை அவ­சர அவ­ச­ர­மாக அங்­கி­ருந்து மீட்­டனர். 

தொடர்ந்து சம்­பவ இடத்­துக்கு வந்த அவ­சர சேவைப் பிரி­வி­னரால் மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு செல்­லப்­பட்ட நயிபம் புரொம்­ரே­ரியின்  உடல் நலம் தற்­போது தேறி வரு­வ­தாக  அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன. மேற்­படி சம்பவத்தில்  அவர் உயிர் தப்பியமை அதிசய சம்பவம் ஒன்றாக கருதப்படுகிறது.  குறிப்பிட்ட ஆலயத்தின் மதகுருமார்  மேற்படி கரடியையும் ஏனைய விலங்குகளையும்  வளர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு...

2024-04-20 08:19:02
news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17