உலக மெய்­வல்­லுநர் சம்­பி­யன்ஷிப் இன்று ஆரம்பம் ; போல்ட்டின் கடைசித் தொடர்

Published By: Priyatharshan

04 Aug, 2017 | 09:44 PM
image

உலக மெய்­வல்­லுநர் சம்­பி­யன்ஷிப் போட்­டிகள் இன்று லண்­டனில் ஆரம்­ப­மா­கின்­றன. இந்தத் தொடரில் இலங்கை சார்­பாக நான்­கு பேர் பங்­கேற்­கின்­றனர். அத்­தோடு உலகின் அதி­க­வேக வீரர் என்று வர்­ணிக்­கப்­படும் உசைன் போல்ட் மற்றும் மரதன் சம்­பியன் மோ பரா ஆகியோர் இந்தத் தொட­ருடன் தமது தட­கள வாழ்க்­கை­யி­லி­ருந்து ஓய்வு பெறு­கின்­றனர்.

இரு வரு­டங்­க­ளுக்கு ஒரு­முறை நடை­பெறும் உலக மெய்­வல்­லுநர் போட்­டிகள் கடந்த 2015ஆம் ஆண்டு சீன தலை­நகர் பீஜிங்கில் நடை­பெற்­றன. அதன்­பி­றகு இவ்­வாண்­டுக்­கான போட்­டி­களை நடத்­து­வ­தற்­கான வாய்ப்பை லண்டன் பெற்­றுக்­கொண்­டது.

அதன்­படி இன்று ஆரம்­ப­மாகும் போட்­டிகள் எதிர்­வரும் 13ஆம் திக­தி­வரை 2012ஆம் ஆண்டு ஒலிம்பிக் நடை­பெற்ற லண்டன் ஸ்டவர்ட் ஒலிம்பிக் மைதா­னத்தில் நடை­பெ­ற­வுள்­ளன.

200 நாடு­களைச் சேர்ந்த சுமார் 2000 வீர, வீராங்­க­னைகள் கலந்­து­கொள்­ள­வுள்ள லண்டன் உலக மெய்­வல்­லுநர் சம்­பி­யன்ஷிப் தொடரின் ஏற்­பாட்­டுக்­கு­ழு­வினால் அறி­விக்­கப்­பட்­டுள்ள அடைவு மட்­டத்­தின்­படி மரதன் போட்­டி­க­ளுக்­காக இலங்கை சார்­பாக அநு­ராத இந்­தி­ரஜித் குரே மற்றும் ஹிருணி விஜே­ரத்ன ஆகியோர் ஏற்­க­னவே நேர­டி­யாகத் தகு­தி­பெற்­றுக்­கொண்­டனர்.

அத்­துடன் இந்­தி­யாவின் புவ­னேஷ்­வரில் இம்­மாத முற்­ப­ கு­தியில் நடை­பெற்ற 22ஆவது ஆசிய மெய்­வல்­லுநர் போட்டித் தொடரில் இலங்­கைக்­காக ஒரே­யொரு தங்கப் பதக்­கத்­தினை வென்று கொடுத்த நிமாலி லிய­னா­ரச்சி (800 மீற்றர் ஓட்டம்) உலக மெய்­வல்­லுநர் போட்­டி­க­ளுக்­கான அடை­வு­மட்­டத்தை பூர்த்தி செய்­யாத போதிலும், ஆசி­யாவில் முத­லி­டத்தைப் பெற்­றுக்­கொண்­டதால் குறித்த போட்­டி­களில் பங்­கேற்கும் வாய்ப்­பினைப் பெற்­றுக்­கொண்டார்.

இதே­வேளை, ஈட்டி எறிதல் வீரர் வருண லக் ஷான் தயா­ரத்ன குறித்த போட்­டிக்­கான தரப்­ப­டுத்­தலில் 29ஆவது இடத்தைப் பெற்­றுக்­கொண்­டுள்­ளதால் பெரும்­பாலும் அவ­ருக்கும் இப்­போட்டித் தொடரில் பங்­கேற்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்­பார்க்­கப்­பட்­டது.

பொது­வாக உலக மெய்­வல்­லுநர் போட்­டி­க­ளுக்­கான உலக தரப்­ப­டுத்­தலில் முதல் 32 இடங்­களில் உள்ள வீரர்­க­ளுக்கு முதல் சுற்றில் பங்­கேற்கும் வாய்ப்பு கிட்டும்.

அதன்­படி வருண லக் ஷான் 

இதில் பங்­கேற்­பது தொடர்­பான இறுதி முடிவு அறி­விக்­கப்­பட்­டது. குறித்த அறி­விப்­புக்கு அமைய இலங்­கையின் நான்­கா­வது வீர­ராக அவரும் லண்டன் பய­ண­மா­க­வுள்ளார்.

இந்தப் போட்டித் தொடருடன் உலகின் அதி­வேக ஓட்ட வீர­ரான உசைன் போல்ட் மற்றும் மரதன் சம்­பி­ய­னான மோ பரா ஆகியோர் தமது ஓய்வை அறி­விக்­க­வுள்­ள­மையும் குறிப்­பி­டத்­தக்­கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58