அமெ­ரிக்­காவால் ரஷ்­யா­வுக்கு எதி­ராக விதிக்­கப்­பட்­டுள்ள புதிய தடை­க­ளா­னது   ரஷ்­யா­வுக்கு எதி­ரான முழு அள­வி­லான வர்த்­தக போர் ஒன்­றுக்­கான பிர­க­ட­னத்­துக்கு ஒப்­பா­ன­தாகும் என ரஷ்ய  பிர­தமர் திமித்ரி மெட்­வேடேவ்  தெரி­வித்­துள்ளார்.

தனது பேஸ்புக் இணை­யத்­த­ளத்தில் வெளி­யிட்ட செய்­தி­யி­லேயே  அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

 ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் மேற்­படி  தடை விதிப்­பிற்கு ஆமோ­தித்து கைச்­சாத்­திட்­டி­ருப்­பது  அவர்  அந்­நாட்டு பாரா­ளு­மன்­றத்தால் கீழ்­நி­லைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளதை எடுத்­துக்­காட்­டு­வ­தா­க­வுள்­ளது என  அவர் மேலும் கூறினார்.

 "இந்தத் தடைப் பொதி அமெ­ரிக்­காவின் புதிய அர­சாங்­கத்­துடன் எமது உற­வு­களை அபி­வி­ருத்தி செய்­வ­தற்­கான நம்­பிக்­கையை முடி­வுக்குக் கொண்டு வந்­துள்­ளது"  என  ரஷ்ய  பிர­தமர்   அந்த  செய்­தியில் குறிப்­பிட்­டுள்ளார்.

 மேற்படி தடையானது கடந்த ஆண்டில் இடம்­பெற்ற அமெ­ரிக்க ஜனா­தி­பதி தேர்­தலில் தலை­யீடு செய்­தமை மற்றும் உக்­ரே­னி­லி­ருந்து கிறி­மி­யாவை இணைத்­தமை ஆகிய குற்­றச்­சாட்­டு­களின் நிமித்தம் ரஷ்­யாவைத் தண்­டிப்­பதை நோக்­காகக் கொண்­டுள்­ளது.

இந்த தடை விதிப்பில் நேற்று முன்­தினம் புதன்­கி­ழமை கைச்­சாத்­திட்ட டொனால்ட் ட்ரம்ப்,     அந்தத் தடை விதிப்­பா­

னது ஆழ­மான குறை­பா­டு­களைக் கொண்­ட­தாகும்  எனக் குறிப்­பிட்டு அறிக்­கை­யொன்றை அத­னுடன் இணைத்­துள்ளார்.

 அந்த சட்­ட­மூ­ல­மா­னது  ரஷ்ய சக்­தி­வளத் திட்­டங்­களில் அமெ­ரிக்­கர்­களால் முத­லீடு செய்­யப்­படும் பணத்தை வரை­யறை செய்­வ­துடன் அமெ­ரிக்க கம்­ப­னிகள்  ரஷ்­யா­வுடன் வர்த்­த­கத்தை மேற்­கொள்­வ­தையும் கடி­ன­மாக்­கு­கி­றது.

 அத்­துடன் மேற்­படி தடை சட்­ட­மூ­ல­மா­னது  ஈரான் மற்றும் வட கொரி­யா­வுக்கு எதி­ரா

­கவும் தடை­களை விதிக்­கி­றது.

  புதிய தடைகள்  அணு­சக்தி உடன்­ப­டிக்­கையை மீறு­வ­தா­க­வுள்­ளதாக தெரிவித்

துள்ள ஈரான், அது தொடர்பில் சரியான பதிலடியைக் கொடுக்கப் போவதாக சூளு­ரைத்­துள்­ளது. ஆனால் இது தொடர்பில் வட கொரியா  இது­வரை  எது­வித விமர்­ச­னத்தையும் வெளி­யி­ட­வில்லை.