வெளி­வி­வ­கார அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­விற்கு எதி­ராகக் கைய­ளிக்­கப்­பட்­டுள்ள நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்கு ஐக்­கிய தேசியக் கட்சி உறுப்­பி­னர்­களும் ஆத­ர­வ­ளிக்­க­வுள்­ளனர். அவர்கள்  அது தொடர்பில் எம்­மிடம் தனிப்­பட்ட முறையில் விருப்பம் தெரி­வித்­துள்­ளனர் என்று  கூட்டு எதி­ர­ணியின் முக்­கி­யஸ்­தரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான  மஹிந்­தா­னந்த அழுத்­க­மகே தெரி­வித்தார்.

அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­விற்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை கூட்டு எதிர்க்­கட்சி நேற்று பாரா­ளு­மன்ற பிரதி செய­லாளர் நாய­கத்­திடம் நேற்று  கைய­ளித்­துள்­ளது. பிரே­ர­ணையை  கைய­ளித்த பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார். 

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், 

அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­விற்கு எதி­ராக கைய­ளிக்­கப்­பட்­டுள்ள நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை வெற்­றி­ய­ளிக்கும் என நம்­பு­கிறோம். எனவே அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை  வாக்­கெ­டுப்­புக்கு செல்ல முன்னர் கெள­ர­வ­மான முறையில் இரா­ஜி­னாமா  செய்ய வேண்டும். அல்­லா­து­போனால் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணை­யூ­டாக அவர் பதவி விலக வேண்­டி­வரும்.

அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­விற்கு எதி­ராக கூட்டு எதிர்க்­கட்சி ஏற்­க­னவே இலஞ்ச ஊழல் விசா­ரணை ஆணைக்­கு­ழுவில் முறைப்­பாடு செய்­துள்­ளது. அப்­போது அது தொடர்பில் எவரும் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. எனினும் தற்­போது ஜனா­தி­பதி ஆணைக்­குழு விசா­ர­ணையின் பின்னர் மத்­திய வங்கி பிணை முறியில் இடம்­பெற்­றுள்ள மோசடி தொடர்பில் அனை­வரும் புரிந்­து­கொண்­டுள்­ளனர்.

எனவே கைய­ளிக்­கப்­பட்­டுள்ள நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்கு  ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியில் அங்கம் வகிக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் 97 பேரும் ஆத­ர­வ­ளிக்க வேண்டும் எனக்­கேட்டுக் கொள்­கிறோம். மேலும் அவ­ருக்கு எதி­ராகக் கொண்­டு­வ­ரப்­படும் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்கு மக்கள் விடு­தலை முன்­னணி ஆத­ர­வ­ளிக்­க­வுள்­ள­தாக ஏற்­க­னவே தெரி­வித்­துள்­ளது. அத்­துடன் ஐக்கிய தேசியக் கட்சியில் அங்கம் வகிக்கும் அதிகளவான அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்கவுள்ளதாக தனிப்பட்ட முறையில் எம்மிடம் தெரிவித்துள்ளனர் என்றார்.