கொழும்பு - கண்டி பிரதான வீதியில் சமிக்ஞை பெயர் பலகை வீதியின் குறுக்கே வீழ்ந்துள்ளமையே பேலியகொடை பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

பாரவூர்தியொன்று மீது சமிக்ஞை பெயர் பலகை இன்று காலை சரிந்து வீழ்ந்துள்ளது.

அப்பகுதியில் ஏற்பட்டுள்ள வாகன நெரிசலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். இதன்காரணமாக, கொழும்பிற்கு வரும் வாகனங்கள் நவலோக்க சுற்றுவட்டத்தின் ஜப்பான் நட்பு பாலத்தின் ஊடாக கொழும்பிற்கு வர முடியும்.