ஹம்பாந்தோட்டை ஒப்பந்தத்தின் மூலம் நாட்டுக்கு நேரடி முதலீடு : மத்திய வங்கியின் ஆளுனர் 

Published By: Priyatharshan

04 Aug, 2017 | 06:10 AM
image

ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதையடுத்து நேரடியபக வெளிநாட்டு முதலீடாக 100 மில்லியன் அமெரிக்க டொலர் நாட்டிற்கு கிடைப்பதாகவும் அதுமட்டுமல்லாது நாட்டிற்கு மேலும் நேரடி  முதலீடாக 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கும் எனவும் மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார்.

 

2017 ஆம் ஆண்டின் ஐந்தாவது நிதிக் கொள்கை தொடர்பாக கோட்டை, இலங்கை மத்திய வங்கியன் ஆளுநர் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற உடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத்தெரிவித்தபோதே மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்த்தின் மூலம் 40 கோடி அமெரிக்க டொலர்கள் நாட்டிற்கு கிடைக்கவுள்ளது. நாட்டின் மொத்த வெளிநாட்டு ஒதுக்கம் இவ்வாண்டில் 670 கோடி அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிக்கும். 

வறட்சியினால் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தாலும் எதிர்வரும் நவம்பர் மாதம் அளவில் பணவீக்கம் மேலும் குறைவடையும். 

 

ரூபாவின் பெறுமதி டொலருக்கு அமைவாக போட்டித் தன்மையுடன் அதிகரிப்பது அவசியமாகும். ஏற்றுமதியை அதிகரிப்பது பற்றி கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உற்பத்தி, முதலீடுகள் என்பனவற்றை அதிகரித்து புதிய தொழில்வாய்ப்புக்களும் விஸ்தரிக்கப்பட வேண்டும்.

நாட்டின் பொருளாதாரம் முறையான விதத்தில் ஸ்திரத்தன்மையை அடைந்து வருகின்ற நிலையில், நாட்டின் பொருளாதாரக் கொள்கை பற்றி சர்வதேச நாணய நிதியமும் பாராட்டுத் தெரிவித்துள்ளது. 

இவ்வருடத்தின் முதலாவது காலாண்டில் தேசிய பொருளாதாரம் 2.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தது. இயற்கை அழுத்தங்களுக்கு மத்தியிலும் நாட்டின் ஏற்றுமதி வருமானம் 6.8 சதவீத்தினால் அதிகரித்திருந்தது. பணவீக்கம் 6.1 சதவீதத்தில் இருந்து 4.8 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டுள்ளது.

 

சுற்றுலாத் துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காட்டுவதாகவும் இவ்வருடத்தில் இதுவரை பத்து இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளானர் என அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09