சென்னையிலுள்ள அரச ஆரம்பப் பாடசாலையொன்றில் மின்விசிறியொன்று கழன்று விழுந்ததில் பாடசாலையில் கல்வி கற்றுக்கொண்டிருந்த முதலாம் வகுப்பு மாணவர்கள் இருவர் காயமடைந்துள்ளனர்.

சென்னை, திருவொற்றியூர் சத்தியமூர்த்தி நகரில் அமைந்துள்ள மாநகராட்சி பாடசாலையில் சுமார் 200 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

குறித்த பாடசாலையில் சுமார் 20 மாணவர்கள் இருந்த முதலாம் வகுப்பு அறையில் மின்விசிறி கழன்று விழுந்துள்ளது. இதனால் இரு மாணவர்கள் மாத்திரம் காயமடைந்த போதிலுமு; ஏனைய மாணவர்கள் தெய்வாதீனமாக எவ்வித காயங்களுமின்றி தப்பியுள்ளனர்.

சுற்றிக் கொண்டிருந்த மின்விசிறியின் இறக்கைகள் வெட்டியதாலேயே மாணவர்கள் இருவர் காயமடைந்துள்ளனர்.