பிறப்புறுப்பை தானே துண்டித்துக்கொண்ட கைதி ; எதற்கு தெரியுமா..?

03 Aug, 2017 | 05:11 PM
image

சிறைச்சாலையில் சிறைவாசம் அனுபவித்து வந்த கைதியொருவர் தனக்கு வழங்கப்பட்ட 'பிக் ரேஸரை' பயன்படுத்தி தனது பிறப்புறுப்பைத் தானே துண்டித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

பிரித்தானிய மான்செஸ்டர் பிராந்தியத்திலுள்ள சிறைச்சாலையிலே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் பீற்றர் சத்திரசிகிச்சை நிபுணர்கள் சுமார் 26 மணி நேரம் சத்திர சிகிச்சை மேற்கொண்டு  கைதியின்  துண்டிக்கப்பட்ட பிறப்புறுப்பின் பகுதியை அவருக்கு மீளப் பொருத்தியுள்ளனர். 

ஏற்கனவே பிளாஸ்டிக் துண்டொன்றால் தனது கையை வெட்டி தற்கொலை செய்ய முயற்சித்திருந்த அவருக்கு எவ்வாறு பிக் ரேஸரை வழங்க சிறைச்சாலை உத்தியோகஸ்தர்கள் அனுமதித்தார்கள் என அவரது குடும்பத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர். 

முன்னாள் இராணுவ உத்தியோகத்தரும் 5 பிள்ளைகளுக்குத் தந்தையுமான பீற்றர் ஸ்மித் என்ற குறித்த கைதி, ஆயுதங்களை சட்டவிரோதமாக வைத்திருந்தமை போதைவஸ்து தொடர்பான குற்றச்செயல்களில் ஈடுபட்டமை ஆகிய குற்றச்சாட்டுகளிள கீழ் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right