(ஆர்.யசி)

சகல மாகாண சபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த தீர்மானம் எடுக்கப்படும். எப்போது தேர்தலை நடத்துவதென்பது குறித்து பாராளுமன்றம் தீர்மானிக்க வேண்டும் என மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சர் பைசர் முஸ்தப்பா தெரிவித்தார். கலப்பு முறைமையிலே தேர்தலை நடத்தவேண்டும் என்பதே சகல தரப்பினரதும் தீர்மானம் எனவும் அவர் குறிப்பிட்டார். 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செய்தியாளர் சந்திப்பு கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.