இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு கைதுசெய்யப்பட்டு  விடுதலைசெய்யப்பட்ட 77 இந்திய மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சர்வதேச கடல் எல்லையில் வைத்து இந்திய கடற்படை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

கடந்த 25 ஆம் திகதி இலங்கை அரசாங்கத்தால் நல்லிணக்க  அடிப்படையில் இலங்கை சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட தமிழக மீனவர்கள்  77 பேரை சர்வதேச கடல் எல்லையில் வைத்து இலங்கை கடற்படைக்கு சொந்தமான கப்பலில் இருந்து இந்திய கடலோர படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

மேலும் புழல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட இரண்டு இலங்கை  மீனவர்களை இந்திய கடலோரபடை அதிகாரிகள்  இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்.

இதேவேளை, இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்டிபிடியில் ஈடுபட்ட 15 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்படாமல் இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.