யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் மேலும் இருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கடந்த 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரு பொலிஸார் மீது இனந்தெரியாத குழுவினால் யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை கைதுசெய்து பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, குறித்த இருவரையும் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். மேல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவரை இன்று யாழ்ப்பாணம் பொலிஸார் கைதுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.