இலங்கைக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டி இன்று கொழும்பு எஸ்.எஸ்.ஸி. மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி 26 ஆம் திகதி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றது.

இப் போட்டியில் இந்திய அணி 304 ஓட்டங்களால் வெற்றிபெற்று 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலைபெற்றுள்ளது.