இந்­தி­யா­வுடன் இன்று நடை­பெ­ற­வுள்ள இரண்­டா­வது டெஸ்ட் போட்­டியில் ஒரே இலக்கு வெற்­றிதான்.

வெற்­றி­பெ­று­வதைத் தவிர வேறு எந்த சிந்­த­னை­யையும் இன்றைய டெஸ்ட் போட்டி மீது நாம் கொள்ள மாட்டோம் என இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்­திமால் தெரி­வித்தார்.

இலங்கை – இந்திய அணிகள் மோதும் 2ஆ-வது டெஸ்ட் போட்டி கொழும்பு எஸ்.எஸ்.சி. கிரிக்கெட் மைதா­னத்தில் இன்று தொடங்­கு­கி­றது. 

விராட் கோஹ்லி தலை­மை­யி­லான இந்­திய கிரிக்கெட் அணி இலங்­கையில் சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்டு விளை­யாடி வரு­கி­றது.

இவ்­விரு அணி­க­ளுக்­கி­டை­யி­லான 3 போட்­டிகள் கொண்ட டெஸ்ட் போட்டித்  தொடரில் காலி மைதா­னத்தில் நடை­பெற்ற முதல் டெஸ்டில் இந்­தியா 304 ஓட்டங்கள் வித்­தி­யா­சத்தில் அபார வெற்றி பெற்­றது. 

இந்­நி­லையில் இந்­திய – - இலங்கை அணிகள் மோதும் 2ஆ-வது டெஸ்ட் போட்டி கொழும்பில் இன்று தொடங்­கு­கி­றது.

முதல் டெஸ்டை போலவே இந்த டெஸ்­டிலும் வென்று இந்­தியா 2-–0 என்ற கணக்கில் வென்று முன்­னிலை பெறும் ஆர்­வத்­துடன் இருக்­கி­றது.

இன்­றைய போட்டி குறித்து கருத்து தெரி­வித்த இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்­திமால்,  முதல் போட்­டியில் ஏற்­பட்ட தோல்­விக்கு இந்தப் போட்­டியில் நாம் பதி­லடி கொடுப்போம். வெற்றி பெறு­வது மட்­டுமே எமது சிந்­த­னை­யாக உள்­ளது.

எந்­த­வொரு அணிக்கும் எதி­ரணி வியூ­கங்­களை வகுக்கும். அதேபோல் இன்­றைய போட்­டியில் இந்­தி­யாவை கட்­டுப்­ப­டுத்­தவும் எம்­மிடம் சில வியூ­கங்கள் இருக்கின்றன.

அதேபோல் எமது அணி வீரர்­களின் உபா­தைகள் அணிக்கு உபத்­தி­ர­வமாக இருக்கின்றன. அசேல இந்­திய தொட­ரி­லி­ருந்து வெளி­யே­றி­யுள்ளார். அதபோல் லக்­மா­லுக்கும் ஆட முடி­யாது.

அதனால் திரி­மான்ன உள்ளே வந்­தி­ருக்­கிறார் அவரும் எமக்கு சிறந்த பங்­க­ளிப்பை வழங்­குவார் என்று எதிர்­பார்க்­கிறோம் என்றார்.

துடுப்­பாட்டம் மற்றும் பந்து வீச்சில் சம பலத்­துடன் திகழும் இந்­திய அணி மிகுந்த நம்­பிக்­கை­யுடன் இலங்­கையை சந்­திக்­கி­றது.

காலி டெஸ்­டில் ­இந்­திய அணியின் தொடக்க வீரர்­க­ளான தவான், அபினவ் முகுந்த் ஆகியோர் சிறப்­பாக ஆடி­னார்கள். 

இதனால் இன்­றைய டெஸ்டில் தொடக்க வீரர்கள் வரி­சையில் மாற்றம் இருக்­குமா? அல்­லது அதே அணி நீடிக்­குமா என்று எதிர்பார்க்­கப்­ப­டு­கி­றது. 

ராகு­லுக்கு வாய்ப்பு வழங்­கப்­பட்டால் அபினவ் முகுந்த் நீக்­கப்­ப­டுவார். மற்­ற­படி வேறு எந்த மாற்­றமும் இருக்­காது.

இதே­போல அணித் தலைவர் விராட் கோஹ்லி, புஜாரா ஆகி­யோரும் நல்ல நிலையில் உள்­ளனர். இரு­வரும் முதல் டெஸ்டில் சதம் அடித்து முத்­திரை பதித்­தி­ருந்­தனர்.

புஜா­ரா­வுக்கு இன்­றைய போட்டி 50ஆ-வது டெஸ்ட் ஆகும். 

பந்து வீச்சில் அஷ்வின், ஜடேஜா, முக­மது ‌ஷமி ஆகியோர் சிறப்­பான நிலையில் உள்­ளனர். இதனால் இலங்­கையை வீழ்த்தி முன்­னிலை பெறும் ஆர்­வத்தில் இந்­திய அணி இருக்­கி­றது.

நிமோ­னி­யா காய்ச்சல் கார­ண­மாக முதல் டெஸ்டில் விளை­யா­டாத இலங்கை அணித் தலைவர் சந்­திமால் இன்­றைய போட்­டியில் தலைமைப் பொறுப்பை ஏற்று கள­மி­றங்­கு­கிறார். 

இதே­போல லஹிரு திரி­மான்­னவும் அணியில் சேர்க்­கப்­பட்­டுள்ளார். இந்த இரு­வ­ரது வரு­கையால் இலங்கை அணி துடுப்­பாட்­டத்தில் பலம் பெறும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

உபுல் தரங்க, திமுத் கரு­ணா­ரத்ன, அஞ்சலோ, திக்­வெல்ல, குண­தி­லக்க, ரங்கன, விஷ்வ பெர்­னாண்டோ போன்ற சிறந்த வீரர்­களும் அணியில் உள்­ளனர். 

முதல் டெஸ்டில் ஏற்­பட்ட தோல்­விக்கு பதி­லடி கொடுக்கும் ஆர்­வத்தில் இலங்கை அணி உள்­ளது. 1–-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்ய இலங்கை வீரர்கள் கடு­மை­யாக போரா­டு­வார்கள் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

இரு அணி­களும் இன்று மோதும் போட்டி 40ஆ-வது டெஸ்ட் போட்­டி­யாகும். இது­வரை நடந்த 39 போட்­டி­களில் இந்­தியா 17 மற்றும், இலங்கை 7 போட்டிகளில் வெற்றி பெற்­றுள்­ளன. 

15 டெஸ்ட் போட்­டிகள் சம­நி­லையில் முடிந்­துள்­ளன. இன்­றைய போட்டி இலங்கை நேரப்­படி காலை 10 மணிக்கு தொடங்­கு­கி­றது. 

இந்­திய அணி

விராட் கோஹ்லி (அணித் தலைவர்), தவான், அபினவ் முகுந்த், புஜாரா, ரஹானே, ஹர்த்திக் பாண்­டியா, விருத்­திமான் சஹா, ரவீந்­திர ஜடேஜா, அஷ்வின், முஹ­மது ‌ஷமி, உமேஷ் யாதவ், ராகுல், ரோஹித் ஷர்மா, புவ­னேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், இஷாந்த் ஷர்மா.

இலங்கை அணி 

தினேஷ் சந்­திமால் (அணித் தலைவர்), உபுல் தரங்க, திமுத் கருணாரத்ன, தனுஷ்க குணதிலக்க, குசல் மெண்டிஸ், அஞ்சலோ மெத்தியூஸ், நிரோஷன் திக்வெல்ல, தில்ருவன் பெரேரா, ரங்கன ஹேரத், நுவன் பிரதீப், லஹிரு திரிமான்ன, தனஞ்சய டி சில்வா, லஹிரு குமார, விஷ்வ பெர்னாண்டோ, மலிந்த புஷ்ப குமார, சந்தகான்.