டெங்கு மரணம் உயர்கிறது : கடந்த 7 மாதங்களில் எவ்வளவு தெரியுமா ?

Published By: Priyatharshan

03 Aug, 2017 | 06:58 AM
image

நாடளாவிய ரீதியில் பரவிவரும் டெங்கு காய்ச்சலினால் பலியானவர்களின் எண்ணிக்கை 327 ஆக உயர்ச்சி கண்டுள்ளது. 

இதுவரையிலான எழுமாத காலத்தில் ஒரு இலட்சத்து 17 ஆயிரத்து 743 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

நாடளாவிய ரீதியிலான டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டத்தை இன்றில் இருந்து ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

நாட்டில் பரவிவரும் டெங்கு காய்ச்சல் காரணமாக ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்துள்ளது. கடந்த எழுமாத காலத்தில் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து  17 ஆயிரத்து 743 ஆக உயர்வு கண்டுள்ளது. 

அதேபோல் இது வரையில் 327 பேர் டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டில் ஜனவரி மாதத்தில் 10 ஆயிரத்து 927 பேர், பெப்ரவரி மாதம்  8 ஆயிரத்து 722 பேர். மார்ச் மாதம்  13 ஆயிரத்து 539 பேர். ஏப்ரல் மாதம்  12 ஆயிரத்து  512 பேர், மே மாதம் 15 ஆயிரத்து  918 பேர், ஜூன் மாதம்  25 ஆயிரத்து  90 பேர், ஜூலை மாதம் 31 ஆயிரத்து  49 பேர் என்ற ரீதியில் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

மேல் மாகாணத்தில் டெங்கு காய்ச்சலின் பரவல் அதிகரித்துள்ளது மேல் மாகாணத்தில் கொழும்பில் 25 ஆயிரத்து 88 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 21 ஆயிரத்து 122 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 6 ஆயிரத்து 716 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 44.95 வீத வேகத்தில் கடந்த எழுமாத காலத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளது.  அத்துடன்  இன்றில் இருந்து மீண்டும் நாடளாவிய ரீதியிலான டெங்கு ஒழிப்பு செயற்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சி குறிப்பிட்டுள்ளது. 

இதற்கு முன்னர் கடந்த ஜூலை மாதம் 27 ஆம் திகதில் இருந்து முன்னெடுக்கப்பட்ட மூன்று நாட்கள் விசேட வேலைத்திட்டத்தின் மூலமாக நாட்டின் சகல பகுதிகளிலும் 5,48,600,000 பகுதிகள் பரிசோதிக்கப்பட்டது. 

இவற்றில் 19 ஆயிரத்து 684 இடங்கள் டெங்கு நோய் பரவக்கூடிய இடமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன்  இவற்றில் 798 இடங்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் அதிகளவில் டெங்கு பரவல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ள கொழும்பு, களுத்துறை,கம்பஹா, குருநகல், காலி, ரத்னபுர, கேகாலை, மாத்தறை மற்றும் மாத்தளை ஆகிய இடங்களில் சிறப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40