பொகவந்தலாவை கொ்க்கஸ்வோல்ட் மத்திய பிரிவு தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 38 போ் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவை பிரேதேச வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸாா் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொகவந்தலாவ கொ்க்கஸ்வோல்ட் இல 02 தமிழ் வித்தியாலயத்தில் பணிபுரியும் ஆசிரியா் ஒருவரும் உள்ளடங்குவதாக வைத்தியசாலையின் பேச்சாளா் தெரிவித்தார்.

குளவிக் கொட்டுக்கு இலக்கான 38 பேரில் 08 பெண்தொழிலாளா்கள் சகிச்சை பெற்று வீடு திரும்பியதாகவும் ஒரு ஆசிரியா் மற்றும் 29 பெண் தொழிலாளா்கள் மொத்தம் 30 போ் தங்கி சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்திசாலையின் பேச்சாளா் மேலும் தெரிவித்தார்.

தேயிலை மலையின் அடிக்பகுதியில் இருந்த குளவிக் கூடில் இருந்த குளவிகள் கலைந்து வந்து தாக்கியமையினால் இந்த அனா்த்தம் ஏற்பட்டதாகவும் பாதிப்புக்குள்ளான தொழிலாளா்கள் எவருக்கும் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.