உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு மேலதிக வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகளை நடத்த இன்று நள்ளிரவு முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு இன்று நள்ளிரவு 12 மணி முதல் பரீட்சை நிறைவடையும் செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி வரையில் பரீட்சார்த்திகளுக்காக மேலதிக வகுப்புக்களை நடத்துதல், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துதல் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பரீட்சைக்குரிய மாதிரி வினாப்பத்திரங்களை அச்சிடுதல், விநியோகித்தல் போன்ற செயற்பாடுகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.