நேற்று நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு இன்று ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. 

அமைச்சரவை முடிவுகள் பின்வருமாறு,

01. உயர் கல்விக்காக வேண்டி விசேட மத்திய நிலையம் ஒன்றை ஸ்தாபித்தல் (நிகழ்ச்சி நிரலின் விடய இல. 10)

சர்வதேச மட்டத்திலான பல்கலைக்கழகமொன்றை அரச மற்றும் தனியார் துறையுடன் இணைந்த இணை நிர்வனம் ஒன்றை இலங்கையில் ஸ்தாபிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அப்பணிக்காக ஆஐவு நிறுவனம் மற்றும் கெலிபோனியாவின் பர்க்லி பல்கலைக்கழகம் போன்ற உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களின் ஒத்துழைப்புடன் மற்றும் தனியார் துறையினரின் முதலீட்டினை பெற்றுக் கொள்வது உட்பட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வேண்டி இலாப நோக்கமற்ற, பிணை மட்டுப்படுத்தப்பட்ட நிறுவனம் ஒன்றை ஸ்தாபிப்பது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

02. இரண்டாம் ஒன்றிணைந்த வீதி முதலீட்டு வேலைத்திட்டத்தினை செயற்படுத்தல் (விடய இல. 11)

வீதி முதலீட்டு வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் மேல் ஆகிய மாகாணங்களில் 3,400 கி.மீ. வரையான கிராமத்துக்காக பிரவேசிக்கும் வீதிகள் மற்றும் 340 கி.மீ. வரையான தேசிய வீதிகள் போன்றவற்றை புனர் நிர்மானம் செய்து, அதனை உரிய முறையில் பராமரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. குறித்த இரண்டாம் ஒன்றிணைந்த வீதி முதலீட்டு வேலைத்திட்டத்திற்கான நிதியினை பெற்றுக் கொள்வதற்காக வேண்டி ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் கலந்துரையாடல் இணக்கத்தை மேற்கொள்வதற்கும், உரிய கடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

03. புகையிரத வீதி வலையமைப்பினை மேற்பார்வை செய்தல் மற்றும் விருத்தி செய்தல் (விடய இல. 12)

கரையோர புகையிரத பாதை, வடக்கு புகையிரத பாலை மற்றும் மாத்தளை புகையிரத பாதை ஆகிய புகையிரத வீதிகளில் அமைந்துள்ள 100 வருடத்துக்கும் பழமையான 07 புகையிரத பாலங்களை புனர்நிர்மாணம் செய்தல், மஹவ, காலி மற்றும் தெமடகொட பிரதேசங்களில் அமைந்துள்ள புகையிரத திருப்பங்களை புனர் நிர்மாணம் செய்வதற்கு மற்றம் புகையிரத வீதி வலையமைப்பினை மேற்பார்வை செய்வதற்கு தேவையான உபகரணங்களை பெற்றுக் கொள்வதற்காக வேண்டி 7.6 மில்லியன் யூரோ மதிப்பீட்டு செலவில் செயற்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ள வேலைத்திட்டத்துக்காக வேண்டி ஓஸ்ட்ரியா அரசாங்கத்தின் மூலம் பெற்றுத் தருவதற்கு இணக்கம் தெரிவித்துள்ள சலுகை கடன் தொடர்பில் கலந்தாலோசனை இணக்கத்தினை பெற்றுக் கொள்வதற்கும், உரிய கடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கும தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

04. வனஜீவராசிகளின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக வேண்டி வாயு சக்தியினால் செயற்படுகின்ற ஆயுத பாவனையினை நிர்ணயம் செய்தல் (விடய இல. 16)

சிலவகை வனஜீவராசிகளின் அதிகரிப்பினால் இன்று பல்வேறு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன. பயிர்செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மறுபுறம் இவ்வாறான ஜீவராசிகளிடத்தில் இருந்து பயிர்களை பாதுகாப்பதற்காக பயன்படுத்தப்படுகின்ற, வாயு சக்தியினால் செயற்படுத்தப்படுகின்ற ஆயுதங்களை மிருகங்களை வேட்டையாடுவதற்கு பயன்படுத்துவது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அதனடிப்படையில் இது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் குழுவின் மூலம் முன்வைக்கப்பட்ட பின்வரும் விடயங்களை செயற்படுத்துவது தொடர்பில் வலுவான அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் கௌரவ காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

• தற்போது பயன்படுத்தப்படுகின்ற வாயு ரய்பலுக்கு பதிலாக அதனை விட வலு குறைந்த வாயு ரய்பலினை உற்பத்தி செய்வதற்கு உள்ள அவகாசங்கள் தொடர்பில் தேடியறிதல் மற்றும் சப்தத்தினால் வனஜீவராசிகளை துறத்துவதற்கு முடியுமான புதிய வகையான வாயு ரய்பலினை உற்பத்தி செய்வதற்கு ஊக்கமளித்தல்.

• தென்னை பயிர்செய்கையின் பாதுகாப்பிற்காக தற்போது பயன்படுத்தப்படுகின்ற வாயு ரய்பல் வழங்குவதை முறைப்படுத்தல்.

• வாயு ரய்பல் ஆயுதத்தினை ஆயுத கட்டளைச்சட்டத்தின் கீழ் உள்வாங்கல்.

• விவசாய பயிர் செய்கைகளுக்கு பாதிப்பு செலுத்துகின்ற உயர் விருத்தியினை காட்டுகின்ற மிருகங்களினை கட்டுப்படுத்துவதற்காக வேண்டி விசேட நிபுணர்களின் ஒத்துழைப்பினை பெற்று உயிரியல் விஞ்ஞான ஆய்வுகளை மேற்கொள்ளல்.

• பயிர்களுடன் இணைந்து செல்கின்ற மிருகங்களின் உயிர்களை அழிப்பதற்கு காரணமாக அமைகின்ற விவசாய இரசாயன பதார்த்தங்கள் பாவிப்பதை மட்டுப்படுத்தல்.

• வனஜீவராசிகளால் ஏற்படுகின்ற பாதிப்புக்களை குறைப்பதற்காக வேண்டி நவீன விஞ்ஞான செயன்முறைகளை பயன்படுத்தல்.

• பயிர்செய்கைகளுக்கு பாதிப்பு செலுத்துகின்ற மிருகங்களை பயிர் நிலங்களில் இருந்து விரட்டுவதற்காக சம்பிரதாயபூர்வமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற செயன்முறையினை நவீன தொழில்நுட்பத்தினை கொண்டு விருத்தி செய்து தற்காலத்துக்கு பொருத்தமான முறையில் பயன்படுத்தல்.

• வனஜீவராசிகள் கிராமங்களுக்கு வருவதற்கு ஏதுவாய் அமைகின்ற, திறந்த வெளிகளில் கழிவுகள் கொட்டுவதை குறைத்தல்.

• 'ஹக்க படஸ்' உற்பத்திக்காக பயன்படுத்தப்படுகின்ற திரௌவியங்கள் இறக்குமதியினை மட்டுப்படுத்தல்.

05. ஆரோக்கியம் தொடர்பான தெற்காசிய மாநாட்டுக்காக வலய செயலகத்தை இலங்கையில் ஸ்தாபித்தல் (விடய இல. 11)

ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அவசியமான அறிவு மற்றும் அநுபவங்களை தெற்காசிய நாடுகளுக்கு இடையில் பகிர்ந்தளிப்பதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கும் நோக்கில் ஆரோக்கியம் தொடர்பான தெற்காசிய மாநாட்டிற்கான வலய செயலகத்தை இலங்கையில் ஸ்தாபிப்பது தொடர்பில் நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

06. இலங்கை பிரஜைகளுக்காக வேண்டி இலத்திரனியல் வெளிநாட்டு கடவுச்சீட்டு ஒன்றினை அறிமுகம் செய்தல் மற்றும் வெளியிடல் (விடய இல. 24)

இலங்கை பிரஜைகளுக்காக வேண்டி இலத்திரனியல் வெளிநாட்டு கடவுச்சீட்டு ஒன்றினை அறிமுகம் செய்வது தொடர்பிலான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன் கீழ் அனைத்து வகை தகவல்களையும் உள்ளடக்கிய சிம் அட்டை வடிவிலான இலத்திரனியல் மாதிரி ஒன்று வெளியிடப்பட உள்ளது. அதனடிப்படையில் இலத்திரனியல் வெளிநாட்டு பயண கடவுச்சீட்டினை அறிமுகப்படுத்தல் மற்றும் வெளியிடல் வேலைத்திட்டத்தினை முறையான ஆய்வின் பின்னர் அரச-தனியார் இணைப்பின் கீழ் செயற்படுத்துவது தொடர்பில் உள்நாட்டலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் கௌரவ எஸ்.பி. நாவின்ன அவர்கள் மற்றும் தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்புகள் அமைச்சர் கௌரவ ஹரின் பிரனாந்து ஆகியோர் இணைந்து முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

07. உபாய முறை நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் மீள் குடியேற்ற கொள்கை கட்டமைப்பினை ஸ்தாபித்தல் (விடய இல. 27)

உபாய முறை நகர அபிவிருத்தி வேலைத்திட்டம் செயற்படுத்தப்படுகின்ற பிரதேசங்களில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி நடவடிக்கைகள் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகின்ற நபர்களுக்காக இழப்பீட்டு தொகையினை செலுத்துவதற்காக வேண்டி அவ்வாறு விருத்தி செய்யப்பட்ட மீள் குடியேற்ற கொள்கை கட்டமைப்பினை சம்பந்தப்படுத்திக் கொள்வது தொடர்பில் மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

08. நீதிமன்ற அமைப்புச் சட்டத்தினை திருத்தம் செய்தல் (மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையினை அதிகரித்தல்) (விடய இல. 31)

மேல் நீதிமன்றத்திற்காக தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள நீதிபதிகளின் எண்ணிக்கையினை 75 இலிருந்து 85 வரை அதிகரிப்பது தொடர்பில் சட்ட வரைஞர் திணைக்களத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட நீதிமன்ற அமைப்பு (திருத்தச்) சட்ட மூலத்தினை அரச வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் பின்னர் அனுமதிக்காக வேண்டி பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் நீதி அமைச்சர் கௌரவ (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. தோலுடன் கூடிய முந்திரிகையினை இறக்குமதி செய்தல் (விடய இல. 32)

இலங்கையில் வருடாந்த தோளுடன் கூடிய முந்திரிகையின் கேள்வி 20,000 மெட்ரிக் தொன்களாகும். எனினும் வருடாந்தம் இங்கு 10,000 மெட்ரிக் தொன்களே உற்பத்தி செய்யப்படுகின்றன. தேசிய சந்தையில் காணப்படுகின்ற தோளுடன் கூடிய முந்திரிகை தட்டுப்பாடானது முந்திரிகை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அதிக குடும்பங்களின் வாழ்வாதாரத்தில் பாரியளவு தாக்கம் செலுத்தியுள்ளது. அதனடிப்படையில், தேசிய சந்தையில் தோளுடன் கூடிய முந்திரிகையின் அவசியத்தை பூர்த்தி செய்து கொள்வதற்காக வேண்டி கமத்தொழில் அமைச்சர் கௌரவ துமிந்த திசாநாயக்க அவர்கள், அரச தொழிற்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ கபீர் ஹாஷpம் அவர்கள் மற்றும் ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் கௌரவ தயா கமகே அவர்கள் ஆகிய மூவரும் இணைந்து முன்வைத்த செயன்முறைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. பெருந்தோட்ட பிரஜைகளுக்கு காணி உரிமைகள் மற்றும் பொருத்தமான வீட்டு வசதிகளை பெற்றுக் கொடுத்தல் (விடய இல. 34)

நுவரெலியா, பதுளை, கேகாளை உட்பட சில மாவட்டங்களில், 2010ம் ஆண்டிலிருந்து 2016ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பல்வேறு வீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தோட்ட தொழிலாளர்களுக்காக நிர்மாணிக்கப்பட்டு வழங்கப்படுகின்ற வீடுகளுக்காக சுதந்திர உறுதிப்பத்திரங்களை வழங்குவது தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள செயற்றிட்டமானது மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பழனி திகாம்பரம் அவர்களினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த திட்டம் தொடர்பில் அமைச்சரவையின் கவனம் செலுத்தப்பட்டது.

11. இலங்கையின் புதிய வர்த்தக கொள்கை (விடய இல. 35)

இறக்குமதியினை அடிப்படையாகக் கொண்ட வியாபாரம் மற்றும் முதலீட்டு துறைக்கு முன்னுரிமை வழங்கி புதிய வர்த்தக கொள்கையொன்றினை உருவாக்கும் தேவை எழுந்துள்ளது. அதனடிப்படையில், உரிய துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களை கொண்ட குழுவினால் இலங்கையின் புதிய வர்த்தக கொள்கையின் அடிப்படை சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதில் வியாபார பிரஜைகள் தொடர்பில் பல்வேறு பிரதான நோக்கங்களை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், முன்மொழியப்பட்டுள்ள வர்த்தக கொள்கையினை ஏற்றுக் கொள்வதற்கும், அதில் உள்ளடங்கப்பட்டுள்ள விடயங்களை உரிய அனைத்து நிர்வனங்களின் ஊடாகவும் செயற்படுத்திக் கொள்வது தொடர்பில் அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் கௌரவ மலிக் சமரவிக்ரம அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. யாழ் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட உள்ள கட்டிடத்துக்கான ஒப்பந்தத்தினை வழங்குதல் (விடய இல. 36)

யாழ் பல்கலைக்கழகத்தில் பொறியியல் தொழில்நுட்பம் மற்றும் உயிரியல் தொகுதி தொழில்நுட்ப பிரிவு என்பவற்றுக்காக புதிய கட்டிடம் மற்றும் மருத்துவ பீடத்திற்கான 08 மாடிகளைக் கொண்ட பயிற்சி கட்டிடம் ஆகியவற்றை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தங்களினை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் முறையே 424.43 மில்லியன் ரூபா தொகைக்கு மற்றும் 564.67 மில்லியன் ரூபா தொகைக்கு வழங்குவது தொடர்பில் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ லக்ஷ;மன் கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. கிழக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி நிர்வனங்களுக்காக நீர் பவுசர்களை கொள்வனவு செய்தல் (விடய இல. 37)

கிழக்கு மாகாணத்தில் வறட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான குடிநீரினை பெற்றுக்கொடுப்பதற்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் தேவையான 23 நீர் பவுசர்களை கிழக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி நிர்வனங்களுக்காக கொள்வனவு செய்வது தொடர்பில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. அகுணகொலபெலெஸ்ஸ நீர் வழங்கல் முறையின் பிரதான வழங்கும் பிரிவிற்காக உதிரிப்பாகங்கள் மற்றும் னுஐ குழாய் பொருத்தி பகிர்ந்தளிக்கும் ஒப்பந்தம் (விடய இல. 38)

அகுணகொலபெலெஸ்ஸ நீர் வழங்கல் முறையின் பிரதான வழங்கும் பிரிவிற்காக உதிரிப்பாகங்கள் மற்றும் னுஐ குழாய் பொருத்தி பகிர்ந்தளிக்கும் ஒப்பந்தத்தினை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் 166.74 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் வழங்குவது தொடர்பில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

15. அறுவை சிகிச்சை பொருட்களை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் (விடய இல. 41)

வாய், முகம் தொடர்பான அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளும் பயன்படுத்தப்படுகின்ற அத்தியவசிய உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தினை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் வழங்குவதற்கு சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் கௌரவ டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

16. சிறுவர் நோய்தடுப்பு தடுப்பூசி வேலைத்திட்டத்துக்கு அவசியமான தடுப்பூசிகளை கொள்வனவு செய்தல் (விடய இல. 42)

சிறுவர் நோய்தடுப்பு தடுப்பூசி வேலைத்திட்டத்துக்கு அவசியமான 10 வகை தடுப்பூசிகள் 80,000 இனை கொள்வனவு செய்வதற்கான டென்டரினை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் 568,800 அமெரிக்க டொலர்களுக்கு வழங்குவது தொடர்பில் சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் கௌரவ டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

17. நோயாளர்களின் குருதி தட்டுக்கள் குறைகின்ற சந்தர்ப்பங்களில் சிகிச்சை அளிப்பதற்காக பயன்படுத்தப்படுகின்ற ஒளடதங்களை கொள்வனவு செய்தல் (விடய இல. 43)

நோயாளர்களின் குருதி தட்டுக்கள் குறைகின்ற சந்தர்ப்பங்களில் சிகிச்சை அளிப்பதற்காக பயன்படுத்தப்படுகின்ற ஒளடதங்கள் அடங்கிய 500 மில்லி லீடர் போத்தல்கள் 8,500,000 இனை கொள்வனவு செய்வதற்கான டென்டரினை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் 2.54 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வழங்குவது தொடர்பில் சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் கௌரவ டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

18. சிறுநீரக நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான அத்தியவசிய ஒளடதங்களை கொள்வனவு செய்தல் (விடய இல. 44)

சிறுநீரக நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான அத்தியவசிய ஒளடதங்கள் அடங்கிய 50 மில்லி லீடர் போத்தல்கள் 80,000 இனை கொள்வனவு செய்வதற்கான டென்டரினை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் 2.19 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வழங்குவது தொடர்பில் சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் கௌரவ டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

19. பொலன்னறுவை மாவட்ட செயலகத்துக்கான 04 மாடி கட்டிடத்தின் மேலதிக நிர்மாணப்பணிகள் (விடய இல. 45)

நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற பொலன்னறுவை மாவட்ட செயலகத்துக்கான 04 மாடி கட்டிடத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்கான ஒப்பந்தத்தை வழங்குவது தொடர்பில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கௌரவ வஜிர அபேவர்தன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

20. Grant Hyatt  ஹோட்டலின் உரிமையினை மீள்கட்டமைப்புச் செய்தல் (விடய இல. 47)

அரச நிர்வனங்களினால் உரிமை கொண்டாடப்படுகின்ற கென்வில் ஹோல்டின்ஸ் தனியார் நிர்வனத்தின் மூலம் நிர்மாணிக்கப்படுகின்ற Grant Hyatt ஹோட்டல் வேலைத்திட்டத்தினை பயனுள்ள முறையில் நிர்மாணிப்பதற்காக வேண்டி பாரியளவு நிதியிட வேண்டி இருக்கின்றது. எனினும் அரசாங்கத்தின் முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய அவகாசங்கள் அதிகமாக காணப்படுவதாலும் சிறுதொகையினருக்கு மாத்திரம் பயனளிக்க உகந்த இவ்வகையான சொகுசு ஹோட்டல் வேலைத்திட்டங்களுக்கு தொடர்ந்தும் அரச நிர்வனங்களின் நிதியினை செலவிடுவது பொருத்தமற்றது என்பதாலும் இதற்காக தனியார் முதலீட்டினை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், Grant Hyatt ஹோட்டல் வேலைத்திட்டத்தினை முன்னெடுக்கின்ற கென்வில் ஹோல்டின்ஸ் தனியார் நிர்வனத்திடம் உள்ள அரச பங்குகளை விற்பனை செய்வதற்கு உகந்த தனியார் முதலீட்டாளர்களை தெரிவு செய்வதற்கு கொள்முதல் குழு மற்றும் தொழில்நுட்ப மதிப்பீட்டு குழு ஆகியவற்றை நியமிப்பது தொடர்பில் அரச தொழிற்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ கபீர் ஹாஷpம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

21. ஹில்டன் ஹோட்டலின் (Hilton Hotel) உரிமையினை மீள்கட்டமைப்புச் செய்தல் (விடய இல. 48)

அரச நிர்வனங்களினால் உரிமை கொண்டாடப்படுகின்ற ஹோட்டல் டிவலபர்ஸ் தனியார் நிர்வனத்தின் மூலம் நிர்வகிக்கப்படுகின்ற கொழும்பு ஹில்டன் ஹோட்டலின் அரசாங்க உரிமையினை குறைத்து தனியார் துறையின் முதலீட்டுக்கு வாய்ப்பளிக்க முடியுமான, அரசாங்கத்துக்கு உபாய முறை முக்கியத்துவம் அற்ற சொத்தாக 2016ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் இணங்காட்டப்பட்டது. குறித்த ஹோட்டலின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தேவையான முதலீடுகளை மேற்கொள்வதற்காக தனியார் துறையினரை தொடர்பு படுத்திக் கொள்வதன் மூலம் தனியார் துறையின் முதலீடுகளை ஊக்கப்படுத்த முடியுமாக உள்ளதுடன், அரசாங்கத்துக்கு உரித்தான நிதியினை பிற சமூகத்துக்காக மற்றும் பொருளாதார அடிப்படையில் முக்கியத்துவமான விடயங்களுக்கு பயன்படுத்த முடியும்.

அதனடிப்படையில், ஹோட்டல் டிவலபர்ஸ் தனியார் நிர்வனத்தின் பங்குகளில் 51% இனை பொருத்தமான முதலீட்டாளர் ஒருவருக்கு வழங்குவதற்கு கொழும்பு பங்குபரிவர்தனையின் விசேட சபையில் விலை மனுவை முன்வைப்பதற்கு முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும், நிர்வனத்தின் பங்குகளில் 4மூ இனை அதன் பணியாளர்களுக்காக ஒதுக்குவதற்கும், மேலதிக 45% இனை கொழும்பு பங்கு பரிவர்தனையின் போது நிலையான விலைக்கு விற்பனை செய்வதற்கும் அரச தொழிற்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ கபீர் ஹாஷpம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

22. 2018ம் ஆண்டில் இலவசமாக பகிர்ந்தளிப்பதற்காக வேண்டி பாடசாலை பாட புத்தகங்களை அச்சிடல் (விடய இல. 49)

2018ம் ஆண்டில் இலவசமாக பகிர்ந்தளிப்பதற்காக வேண்டி பாடசாலை பாட புத்தகங்களை அச்சிடுவதற்காக வேண்டி அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் தெரிவு செய்யப்பட்ட 25 தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவது தொடர்பில் கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

23. நுவரெலியா குதிரை பந்தய திடலை குத்தகைக்கு விடல் (விடய இல. 50)

தேசிய மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து, முதலீட்டு இலாபங்களை ஈட்டிக் கொள்வதற்கு உகந்த விளையாட்டாக குதிரை பந்தய போட்டிகளை மேம்படுத்த முடியுமாக இருப்பதுடன், அதனடிப்படையில் 2017-12-31ம் திகதியுடன் முடிவடைகின்ற குறித்த குதிரை பந்தய திடலின் குத்தகையினை, அடுத்து வரும் 10 வருட காலத்துக்காக வேண்டி குத்தகைக்கு விடுவதற்காக வேண்டி பொருத்தமான குத்தகை வழங்கும் கம்பனியொன்றை, திறந்த கேள்வி மனுக்கோரலின் மூலம் தெரிவு செய்வது தொடர்பில் விளையாட்டு அமைச்சர் கௌரவ தயாசிறி ஜயசேகர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

24. நாராஹேன்பிட்ட புதிய நகர அபிவிருத்தி வேலைத்திட்டம் - கிரிமண்டல மாவத்தை (விடய இல. 51 மற்றும் 52)

நகர அபிவிருத்தி அதிகார சபையின் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள புதிய அபிவிருத்தி திட்டத்திற்கிணங்க, பல்வேறு வசதிகளுடன் முழுமையான நிலையான நகரமயமான பிரதேசமாக கொழும்பு, நாராஹேன்பிட்ட, கிரிமண்டல மாவத்தையுடன் கூடிய பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய எதிர்பார்க்கப்படுகின்றது. அவ் அபிவிருத்தி திட்டத்தை செயற்படுத்துவதற்காக அப்பிரதேசத்தில் உள்ள பல்வேறு அரச நிறுவனங்களினால் பயன்படுத்தப்படுகின்ற இடங்களை பயன்படுத்திக் கொள்வதற்கும், அதற்காக மாற்று இடங்களை உரிய அரச நிறுவனங்களுக்கு வேறு பிரதேசங்களில் ஒதுக்கி கொடுப்பதற்கும் மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

25. இலகு ரக புகைவண்டி போக்குவரத்து வீதி வேலைத்திட்டத்துக்காக (LRT) நிலங்களை அபகரித்துக் கொள்ளல் மற்றும் அதனால் பாதிப்படைகின்ற பிரிவினருக்கு நட்டஈடு வழங்குதல் (விடய இல. 53)

மேற்படி வேலைத்திட்டத்தின் மூலம் பாதிப்படைகின்ற பிரிவினருக்கு மிகவும் சாதாரண நட்டஈட்டு தொகையினை வழங்குவதன் மூலம் தேவையான இடங்களை அபகரித்துக் கொள்வதை தாமதமின்றி மேற்கொள்ளும் நோக்கில், அதற்காக நில அபகரிப்பு மற்றும் மீள் குடியேற்ற குழு (LARC) மற்றும் நில அபகரிப்பு மற்றும் மீள் குடியேற்ற விசேட குழு (Super LARC ) செயன்முறையினை பின்பற்றுவது தொடர்பில் மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

26. காற்று வலுசக்தி உற்பத்தி செய்யும் வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவதற்காக வேண்டி நிதியுதவியினை பெற்றுக் கொள்ளல் (விடய இல. 54)

காற்று வலுசக்தி உற்பத்தி செய்யும் வேலைத்திட்டத்தினை செயற்படுத்துவதற்கு அவசியமான 256.7 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பீட்டில், 200 மில்லியன் அமெரிக்க டொலர்களினை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. குறித்த நிதியுதவியினை பெற்றுக் கொள்வதற்காக வேண்டி உரிய வங்கியுடன் கடன் உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

27. வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் பாதிப்புக்கு உள்ளான பிரதேசங்களை புனர் நிர்மாணம் செய்தல் மற்றும் மீள் கட்டுமான பணிகளை துரதப்படுத்தல் (விடய இல. 55)

வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் பாதிப்புக்கு உள்ளான பிரதேங்களை துரித கதியில் மீள கட்டியெழுப்பும் நடவடிக்கைகளுக்கு உரிய 50 மில்லியன் ரூபாய்களுக்கு அதிகரிக்காத ஒப்பந்தங்களை, உரிய பொறியியலாளர் மதிப்பீட்டின் அடிப்படையில் மற்றும் கொள்முதல் குழுவின் சிபார்சின் அடிப்படையில், நிர்மாண கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையில் (CIDA) பதிவு செய்யப்பட்ட ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்குவதற்கான அதிகாரத்தை மாவட்ட செயலாளர்களுக்கு வழங்குவதற்கும், நடுத்தர மற்றும் நீண்ட கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஏனைய சலுகை வழங்கும் செயல் திட்டங்களை உரிய அமைச்சுக்கள் மற்றும் மாகாண சபைகளினால் செயற்படுத்துவதற்கும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

28. முன்பள்ளி கல்வியின் மூலம் நல்லிணக்கம் மற்றும் சமத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட சமூக விழுமியங்கள் மற்றும் முறைமை ஒன்றினை அபிவிருத்தி செய்தல் (விடய இல. 57)

முன்பள்ளி பிள்ளைகளுக்கு நபர்கள் மற்றும் சமூக பெறுமதிகள் தொடர்பில் அறிவுறுத்தும் பிரயோக செயற்பாடுகளுடன் கூடிய, வாரத்துக்கு அரை மணித்தியால பாட நெறியொன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் கௌரவ பைசல் முஸ்தபா மற்றும் கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் ஆகியோர் இணைந்து முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

29. வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் பாதிப்புக்கு உள்ளான பிரதேசங்களை புனர் நிர்மாணம் செய்தல் மற்றும் மீள் கட்டுமான பணிகளை துரதப்படுத்தல் (விடய இல. 59)

அனைத்து மாகாண சபை தேர்தல்களினையும் ஒரே தினத்தில் நடாத்துவதற்கு ஏதுவான வகையில் அரசியலமைப்பின் உறுப்புரைகள் மற்றும் 1988ம் ஆண்டு 2ம் இலக்க மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தின் அதற்கு உரிய பிரிவினை திருத்தம் செய்வதற்கு கடந்த அமைச்சரவையின் போது அனுமதி வழங்கப்பட்டது. அதனடிப்படையில், சட்ட வரைஞர் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட மூலத்தை மற்றும் 1988ம் ஆண்டு 02ம் இலக்க மாகாண சபைகள் தேர்தல் (திருத்தச்) சட்ட மூலத்தினை அரச வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும், பின்னர் பாராளுமன்றத்தின் அனுமதிக்காக சமரப்பிப்பதற்கும் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

30. காணப்படுகின்ற வறட்சி காலநிலையினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணமளித்தல் (விடய இல. 60)

தற்போது நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள வறட்சி காலநிலையினால் 17 மாவட்டங்களை சேர்ந்த 500,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அதனால் அப்பிரதேச வாழ் மக்களின் வாழ்க்கையும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. இந்நிலைமையினை கவனத்திற் கொண்டு, வறட்சியினால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களை இனங்கண்டு, அக்குடும்ப உறுப்பினர்களின் முயற்சியினை பொது வேளைகளுக்கு பயன்படுத்திக் கொள்வதனை அடிப்படையாகக் கொண்டு, 5,000 ரூபா பெறுமதியான உலர் உணவு கூப்பன் அட்டை ஒன்றினை 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் மாதாந்தம் அக்குடும்பங்களுக்கு வழங்குவதற்கும், ஏற்பட்டுள்ள பயிர் செய்கை பாதிப்புக்களுக்காக வேண்டி உரிய காப்புறுதி திட்டத்தின் கீழ் துரித கதியில் நட்டஈட்டினை பெற்றுக் கொடுப்பதற்கும், குடிநீர் வழங்கும் வேலைத்திட்டங்களை தொடர்ந்து முன்னெடுப்பதற்கும் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.