மனைவி பிரசவத்திற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளையில் தனது மனைவியின் மூத்த சகோதரியை பலங்கொடை பிரதேசத்திலுள்ள விடுதிக்கு வரவழைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த  நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

பாதிக்கப்பட்ட பெண் தங்கையின் கணவரிடம் கடனாக பணம் கேட்டுள்ளார். இந்நிலையில் குறித்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட குறித்த நபர், பெண் கேட்ட பணத்தை தனது நண்பனிடம் பெற்றுத்தருவதாகக் கூறி தான் பணி புரியும் விடுதிக்கு வருமாறு தனது மனைவியின்யு சகோதரியை வரவழைத்துள்ளார்.

இந்நிலையில் மனைவியின் சகோதரி அங்கு சென்ற சந்தர்ப்பத்தை பயன்படுத்திய  குறித்த நபர் யுவதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார் எனவும் சாட்சியாக தன்னிடம் வீடியோ காட்சி உள்ளதாகவும் குறித்த யுவதி பலங்கொடை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கமைய 31 வயது நிரம்பிய குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

மேலும் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்பட்ட  20 வயது நிரம்பிய யுவதியை வைத்திய பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் பொலிஸார் அனுமதித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.