உமா ஓயத்திட்டத்தால் தாழ் இறங்கும் பண்டாரவளை திக்கறாவ பிரதேசத்திற்கு இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர கடந்த 31 ஆம் திகதி திடீர் விஜயம் செய்துள்ளார்.

குறித்த பகுதிக்கு இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க ஆகியோர் உமா ஓயா நீர் திட்டப்பகுதிக்குச் சென்று பிரதான செயற்திட்ட அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். மேலும் உமா ஓயா நீர் சுரங்கத்தினையும் பார்வையிட்டுள்ளனர்.