ஞாயிறு, போயா தினங்களில் தனியார் வகுப்புக்களை தடைசெய்வதற்கான சட்டம் விரைவில் சமர்ப்பிக்கப்படும்  ; விஜேதாஸ ராஜபக்ஷ

Published By: Priyatharshan

02 Aug, 2017 | 12:27 PM
image

இனி­வரும் காலங்­களில் ஞாயிற்­றுக்­கி­ழமை, போயா விடு­முறை தினங்­களில் 2 மணிக்கு முன்­பாக தனியார் வகுப்­புக்­களை நடத்­து­வதை தடை­செய்­வ­தற்­கான சட்­ட­மூ­லத்தை  விரைவில் பாரா­ளு­மன்­றத்தில் சமர்­ப்பிக்­க­வுள்­ள­தாக  நீதி­ மற்றும் புத்­த­சா­சன அமைச் சர் விஜே­தாஸ ராஜபக் ஷ தெரி­வித்­துள்ளார்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் அர­சியல் வாழ்க்­கைக்கு 40 ஆண்­டுகள் பூர்த்­தி­யா­வ­தை­யிட்டு மஹ­ர­க­மையில் இடம்­பெற்ற கர்ப்­பிணித் தாய்­மார்­க­ளுக்­கான போஷாக்கு உணவுப் பொதி­களை வழங்கும் நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எந்த அள­விற்கு ஒரு மனிதர் கற்­றி­ருந்­தாலும் அவர்கள் சமயம் பற்றி அறிந்­தி­ருக்­கா­விடின் அதனில் பயன் இல்லை.  அற­நெ­றிக்­கல்­வியை கற்­கா­விட்டால் தாம் கற்ற மற்­றைய கல்­வி­யினை சமூ­கத்­திற்கு பய­னுள்ள வகையில் பயன்­ப­டுத்த முடி­யாமல் போகும். 

அதேபோல் அற­நெறிக் கல்வி கற்­ற­வர்­களால் சமூ­கத்­திற்கு என்றும் பாதிப்பு கிடை­யாது. அவர்­களால் நன்மை மாத்­தி­ரமே கிடைக்கும். எனவே அதற்­கான சூழலை சமூ­கத்தில் உரு­வாக்கி ­கொ­டுப்­ப­தற்­கான சட்­ட­மூ­லத்­தினை அமுல்­ப­டுத்­து­வது தொடர்பில்துறை­சார்ந்­த­வர்­க­ளுடன் பேசி­யுள்ளோம்.

அதற்­க­மைய ஞாயிற்­றுக்­கி­ழ­மைகள் மற்றும் போயா தினங்­களில் தனியார் வகுப்­புக்­களை இரத்துச் செய்யும் வகை­யி­லான சட்­ட­மூ­லத்­தினை விரைவில் பாரா­ளு­மன்­றத்தில் அமுல்­ப­டுத்­துவோம்.

இது தொடர்­பில் தனியார் கற்கை நிறு ­வ­னங்­களின் ஆசி­ரி­யர்­க­ளுடன் பல சுற் றுப் பேச்­சு­வார்த்­தைகள் நடத்தப்பட்டுள் ளதுடன் மேற்படி தினங்களில் மாணவர் களை அறநெறி பாடசாலைகளுக்கு அனுப்புமாறும் மாணவர்களுக்கு அறிவு றுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51