சவுதியிலிருந்து இலங்கை வந்த பயணியொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உயிரிழந்த சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த நபர் சவுதியிலிருந்து நேற்று அதிகாலை 4.20 மணியளவில் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

குறித்த நபர் சவுதியில் வசிக்கும் 49 வயதுடைய அபுபக்கர் அப்துல் வாஹிட்  எனவும் சில மாதங்களுக்கு முன்னர் அவரது தனது மனைவியை இலங்கைக்கு அழைத்துவந்து கண்டியில் விட்டுச்சென்றுள்ளார். மீண்டும் தனது மனைவியை சவுதிக்கு அழைத்துச்செல்ல வந்த போதே குறித்த நபர்  உயிரிழந்துள்ளார்.

திடீரென ஏற்பட்ட மாரடைப்புf் காரணமாக குறித்த நபருக்கு மரணம் ஏற்பட்டிருக்கலாம் என சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டுநாயக்க பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.