கேப்­பாப்­பு­லவு காணி விடு­விப்பு தொடர்­பாக பாது­காப்பு தரப்­புக்கு முன்­மொ­ழிவு 

Published By: Priyatharshan

02 Aug, 2017 | 01:29 PM
image

கேப்­பாப்­பு­லவு காணி விடு­விப்பு தொடர்­பாக உரிய நட­வ­டிக்­கை­களை எடுக்­கு­மாறு பாது­காப்புச் செய­லாளர், இரா­ணுவ அதி­காரி ஆகி­யோ­ருக்கு முன்­மொ­ழிவு செய்­யப்­பட்­டுள்­ள­தாக ஜனா­தி­ப­தியின் செய­லாளர் ஒஸ்டின் பெர்­னாண்டோ எதிர்க் கட்சித் தலை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­த­னுக்கு கடிதம் அனுப்­பி­யுள்ளார்.

இடம்­பெ­யர்ந்த தமிழ் மக்­க­ளுக்கு உரித்­தான முல்­லைத்­தீவு, கேப்­பாப்­புலவுக் காணி விட­ய­மாக கடந்த மாதம் 20ஆம் திக­தி­யி­டப்­பட்டு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு அனுப்­பப்­பட்ட தங்­க­ளது கடிதம் தொடர்­பா­னது என்ற தலைப்­பி­டப்­பட்ட அக்­க­டி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, 

காணி  விடயம் தொடர்­பாக நான் பாது­காப்புச் செய­லா­ள­ரு­டனும், இரா­ணுவத் தலைமைக் கட்­டளை அதி­கா­ரி­யு­டனும் பொது­வாகக் கலந்­து­ரை­யா­டி­யுள்ளேன்.  தங்கள் கோரிக்கை தொடர்­பாக அவர்­களும் இணக்கம் தெரி­வித்­துள்­ள­போதும், தங்கள் கடி­தத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது போல் கால­வ­ரை­ய­றையைப் பொறுத்­த­மட் டில் சில மட்­டுப்­ப­டுத்­தல்­களை அவர்கள் கொண்­டி­ருப்­ப­தாகத் தெரி­கின்­றது.   அதன்­படி, உள்­நாட்டில் இடம்­பெ­யர்ந்­த­வர்கள் தமது சொந்த நிலங்­க­ளுக்குத் திரும்பி வர­வேண்­டிய தேவை­யையும், நல்­லி­ணக்கச் செயற்­பா­டு­களின் முக்­கி­யத்­து­வத்­தையும் கருத்

தில் கொண்டு கால­வ­ரை­யறை தொடர்பில் விட்­டுக்­கொ­டுத்து ஒத்­து­ழைக்­கும்­படி நான் அவர்­களைக் கோரி­யுள்ளேன்.

அதற்­க­மை­வாக, முடிந்­த­வரை விரை­வாக இக்­கா­ணி­களை முறைப்­படி விடு­விக்­கும்­பொ­ருட்டு உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தற்­கான அவர்­க­ளது ஒப்­பு­தல்­களை வழங்­கு­மாறு பாது­காப்புச் செய­லா­ள­ருக்கும், இரா­ணுவத் தலைமைக் கட்­டளை அதி­கா­ரிக்கும் தங்கள் கோரிக்­கையை முன்­ன­ளிக்­கின்றேன். 

மேலும், தங்­க­ளது கோரிக்கை தொடர்­பாக நான் ஜனா­தி­ப­திக்கும் வாய்­மொழி மூலம் தெரி­யப்­ப­டுத்­தி­யுள்­ள­தோடு, அவரும் இடம்­பெ­யர்ந்தோர் விட­யத்தில் உத­வு­வ­தற்குத் தானும் அக்­க­றை­யோடு செயற்­ப­டு­வ­தாகத் தெரி­யப்­ப­டுத்­தினார்.

எதிர்­கா­லத்தில் இது­வி­ட­ய­மாக நாங்கள் மேற்­கொள்­ள­வுள்ள இணக்கச் செயல்­மு­றைகள் பற்றி நான் தங்­க­ளுக்கு அறி­யத்­தரும் வரை என்­னுடன் பொறு­மை­யுடன் செயற்­ப­டு­மாறு கேட்டுக் கொள்­கிறேன் என்­றுள்­ளது.  கேப்­பாப்­பு­லவு காணி விடு­விப்பு தொடர்பில் கடந்த 26ஆம் திகதி  மீள்­கு­டி­யேற்ற அமைச்சில் இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­டலை தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் ஜனா­தி­ப­தியின் செய­லா­ள­ருடன்  கலந்­து­ரை­யா­டி­யி­ருந்ததன் பின்­னரே இக்­க­டிதம் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.  இக்­க­டி­தத்தின் பிர­திகள், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு, புனர்­வாழ்­வ­ளிப்பு, மீள்­கு­டி­யேற்றம் மற்றும் இந்­து­மத அலு­வல்கள் அமைச்­சர்டி.எம்.சுவா­மி­நாதன், பாது­காப்புச் செய­லாளர் கபில வைத்­தி­ய­ரத்ன,  பாது­காப்புத் தலைமை அதி­காரி ஜெனரல் ஏ.டபிள்யூ.ஜே.சி. டி சில்வா, இரா­ணுவத் தலைமைக் கட்­டளை அதி­கா­ரி லெப். ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. 

 இதேவேளை குறித்த விடயம் தொடர்பில் தீர்வொன்றினை பெறும் முகமாக, ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் இராணுவ தளபதி ஆகியோருட னான கலந்துரையாடல்களை நாம் தொடர்ந்தும் மேற்கொள்வோம் என எதிர்க்க ட்சித்தலைவரும் கூட்டமைப்பின் தலை வருமான சம்பந்தன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33