நல்­லாட்சி அர­சாங்­கத்­தினால் இந்த நாட்டு மக்­களின் ஜன­நா­யக உரி­மைகள் முழு­மை­யாக பாது­காக்கப்­ப­டு­கின்­றன. இவ்­வா­றி­ருக்­கையில் ஒரு சில­ருக்கு மாத்­தி ரம் குறு­கிய காலத்தில் அதி­கா­ரத்­திற்கு வர­வேண்­டிய தேவை உள்­ளது. எனவே, இவர்கள் நாட்டு மக்கள் பூரண ஜன­நா­யக சுதந்­தி­ரத்­தினை நுகர்­வ­தற்கு இடை ­யூறு செய்­கின்­றார்கள். 3 வரு­டங்­களின் பின்பே அவர் கள் அதி­காரம் குறித்து சிந்­திக்க வேண்­டு­மென ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.

இலங்கை துறை­முக அபி்­வி­ருத்தி அதி­கா­ர­ச­பையின் 38 ஆண்­டு­பூர்த்தி நிகழ்வில் நேற்று  கலந்­துக்­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

இன்று நாட்டில் சிலர் விரைவில் அதி­கா­ரத்தை பெறும்  அவாவில் செயற்­ப­டு­கின்­றார்கள். அவர்கள் அனை­வரும் 3 வரு­டங்­களின்  பின்னர் தான் அதி­காரம் குறித்து சிந்­திக்க முடியும். அது­வ­ரையில் தற்­போ­தைய அர­சாங்­கத்தின் பயணம் தொடரும். 

இன்று அர­சாங்கம் நாட்­டி­லுள்ள மக்­களின் ஜன­நா­யக உரி­மை­களை மதிக்­கின்­றது. அதற்­க­மைய மக்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்ள பூரண ஜன­நா­யக சுந்­தி­ரத்­தினை அனு­ப­விக்க மேற்­படி அதி­கார அவாவில் இருக்­கின்­ற­வர்கள்  இடை­யூறு செய்­கின்­றார்கள்.

அதனால் சிறு குழுக்­களின் தேவைக்­காக மாத்­திரம் நாட்டு மக்­களின் ஜன­நாய உரி­மை­களை கண்­டு­கொள்­ளமால் செயற்­பட முடி­யாது. புதிய அர­சி­ய­ல­மைப்­பிலும் கூட நாட்டில் வாழும் சகல மக்­க­ளி­னதும் அர­சியல் மற்றும் தேர்தல் உள்­ளிட்ட அடிப்­படை உரி­மைகள் பாது­காக்­கப்­படும்.

துறை­முக ஒப்­பந்தம் மேலும் இன்று உல­க­நா­டு­களின் துறை­மு­கங்­க­ளுடன் போட்­டி­யிடும்.  அள­விற்கு எமது நாட்டு துறை­மு­கங்கள் வலு­வ­டைந்­துள்­ள­தை­யிட்டு துறை­முக சேவர்­க­ளுக்கு பாராட்டு தெரி­விப்­ப­துடன் அவர்­களின் வரப்­பி­ர­சா­தங்­களும் அதி­க­ரிக்­கப்­படும்.

வர­லாற்றின் அடிப்­ப­டையில் பார்க்­கின்ற போது  ஆக்­கி­ர­மிப்­பா­ளர்கள் மற்றும் வெளி­நாட்டு பொரு­ளா­தார செயற்­பா­டுகள் சார்ந்­த­வர்­களின் செயற்­பா­டுகள் கார­ண­மாக எமது நாடு உலக நாடுகள் மத்­தியில் சென்­றது. எனவே துறை­மு­கம்தான் உலக நாடுகள் மத்­தியில் எம்மை அடை­யா­ளப்­ப­டுத்­திக்­கொள்ள சாத­க­மான கார­ண­மாக அமைந்­தது.

அத­னால்தான் அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்­தினை பலன்­மிக்க ஒன்­றாக மாற்­று­வ­தற்­கான ஒப்­பந்­தத்­தி­னையும் நாம் கைசாத்­திட்­டுள்ளோம். கடந்த அர­சாங்­கமும் இது­போன்ற ஒரு ஒப்­பந்­தத்­தினை கைசாத்­தி­ட­வி­ருந்­தது. 

அந்த அர­சாங்­கத்­தினை அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­ச­ராக நானும் இருந்த போது குறித்த ஒப்­பந்தம் நாட்­டிற்கு மிக பாரா­தூ­ர­மான ஒன்­றென நான் அறிவேன். அதனால் அந்த ஒப்­பந்­தத்­திற்கு அப்­போதே நான் எதிர்ப்பு தெரி­வித்தேன்.

தற்­போது அவ்­வா­றான விட­யங்­களை மாற்­றி­ய­மைத்து அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை இலங்கை கடற்­ப­டையின் பூரண மேற்­பார்­வையின் கீழ் சீன நிறு­வ­னத்தின் செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்கும் வகையில் ஒப்­பந்­தத்தில்  பரிந்­துரை செய்­துள்ளோம். 

மேலும் இந்­நாட்டின் ஒரு அடி நிலத்­தினை கூட வெளி­நாட்டு நிறு­வ­னங்­க­ளுக்கு நில­வு­ரி­மை­யுடன் வழங்­க­மாட்டோம் என் அர­சாங்­கத்தின் கொள்­கையின் பிர­கா­ரமே மேற்­படி ஒப்­பந்­நதம் கைசாத்­தி­டப்­பட்­டது.

இதற்கு  முன்­னைய அர­சாங்­கங்கள் எவையும் இவ்­வா­றான ஒப்­பந்­தங்­களை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­காத போது நான் அம்­பாந்­தோட்டை துறை­முக ஒப்­பந்­தத்­தினை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்து வெளிப்­ப­டை­யாக செய்ய கூறி­யி­ருந்தேன். 

கடந்த அர­சாங்­கத்தில் இருந்த போது மேற்­படி ஒப்­பந்­தத்தி்ல் இருந்த பாரா­தூ­ர­மான கருத்­து­களில் திருத்தம் செய்யப்பட்டுள்ள காரணத்தினாலேயே எதிரணியினர் துறைமுக ஒப்பந்தம் தொடர்பிலான பாராளுமன்ற  அமர்வில் விவாதங்களை முறையாக முன்னெடுக்கவில்லை என்பதையும் நான் அறிவேன்.

எனவே கொழும்பு துறைமுகத்தை கடன் சுமையிலிருந்து மீட்கும் வகையிலான மேற்படி ஒப்பந்தத்தின் பின்னர் கொழும்பு கிழக்கு இறங்குதுறையினையும் அபிவிருத்தி செய்வதோடு அதனை முழுமையாக இலங்கையின் கீழேயே தக்கவைத்துக்கொள்வோம் என்றார்.