‘நான் சொல்­வதை செய்’ என்று அச்­சு­றுத்தும் தொனியில் அர்­ஜுன மகேந்­திரன் நடந்­து­கொண்டார்

Published By: Priyatharshan

02 Aug, 2017 | 11:51 AM
image

முன்னாள் மத்­திய வங்கி ஆளு நர் அர்­ஜுன மகேந்­திரன் வாய்வார் த்­தை­களின் மூல­மாக என்னை அச்­சு­றுத்­தினார், கத்­தினார். எனது நேர்மையான செயற்­பா­டு­க­ளுக்கு ஆளுநர் இடை­யூறு விளை­வித்த மையினாலேயே அவர் என்னை அச்­சு­றுத்­தினாரென சாட்சிய மளித் தேன் என மத்­திய வங்­கியின் பிரதி ஆளுநர் ஆர்.ஏ.ஜெயலத் தெரி­வித்தார்.

மத்­திய வங்­கியின் ஊழியர் சேம லாப நிதி­யத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட பிர­தான இரு இட­ மாற்­றங்கள் மிகவும் அநீ­தி­யா­னவை. அவர்­களை இட­மாற்றும் தேவை இருக்­க­வில்லை. இவை அனைத் தும் முன்னாள் மத்­திய வங்கி ஆளு நர் அர்­ஜூன மகேந்­தி­ரனின் தலை­மை­யி­லேயே நடை­பெற்­றன. அதன் பின்னர் அவர் என்னை மிரட்டும் தொணியில் கண்­டித்தார்  என நேற்று முன்­தினம் ஆர். ஏ ஜெயலத் சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்தார்.

குறித்த சட்­சியம் தொடர்பில் மத்­திய வங்­கியின் முன்னாள் ஆளுநர் அர்­ஜூன மகேந்­தி­ரனின் சார்பில் வாதா­டிய சட்­டத்­த­ரணி நேற்று கேள்­வி­யெ­ழுப்­பி­யி­ருந்தார். “நேற்று ( நேற்று முன்­தினம்) கூறி­ய­தன்­படி அச்­சு­றுத்­தினார் அல்­லது கண்­டித்தார் என்றால் அர்­ஜூன மகேந்­திரன் உங்­களை துப்­பாக்­கியால் சுட்­டாரா அல்­லது அடித்­தாரா” என சட்­டத்­த­ரணி கேள்­வி­யெ­ழுப்­பி­ய­போதே  “என்னை பொறுத்­த­வ­ரையில் நேர்­மை­யான ஒரு விட­யத்­துக்­காக முறை­யற்று கதைப்­பா­ராயின் அதுவும் எனக்கு அச்­சு­றுத்­தல்தான் என மத்­திய வங்­கியின் பிரதி ஆளுநர் ஆர். ஏ ஜெயலத்  சாட்­சி­ய­ம­ளித்தார். 

 பிணை­முறி தொடர்பில் விசா­ரணை செய்யும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவில் மத்­திய வங்­கியின் பிரதி ஆளுநர் ஆர். ஏ ஜெய­லத்தின் சாட்­சிப்­ப­தி­வு­க­ளோடு நேற்­றைய விசா­ரணை ஆரம்­ப­மா­கி­யது. இதன்­போது அர்ஜூன் அலோ­சி­யஸின் சட்­டத்­த­ர­ணி­யாக ரண­வக்க முன்­னி­லை­யா­வ­தாக முதலில் மனு­வொன்றை சமர்ப்­பித்து ஆஜ­ரானார்.

பிணை முறி மோசடி தொடர்பில் விசா­ர­ணை­களை செய்­வ­தற்­காக ஜனா­தி­ப­தி­யினால் நிய­மிக்­கப்­பட்ட விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் உறுப்­பி­னர்­க­ளான உயர் நீதி­மன்ற நீதி­ய­ரசர் கே.டீ. சித்­தி­ர­சிறி, பி.எஸ் ஜெய­வர்­தன மற்றும் ஓய்­வு­பெற்ற பிரதி கணக்­காய்­வாளர் நாயகம் வேலுப்­பிள்ளை கந்­த­சாமி ஆகியோர் முன்­னி­லையில் இந்த விசா­ர­ணைகள் இடம்­பெற்­றன.

முதலில் மேல­திக சொலி­சிற்றர் ஜெனரல்; பெர்­னான்­டோவின் நெறிப்­ப­டுத்­த­லுடன் எதிர்த்­த­ரப்பு சாட்சி விசா­ர­ணைகள் ஆரம்­ப­மா­கின.

கேள்வி: உங்­க­ளது கல்­வித்­த­கைமை என்ன?

பதில்: இளங்­க­லை­மாணி பட்­டத்தை வர்த்­த­கத்­திலும் முது­மானி பட்­டத்தை வணி­கத்­து­றை­யிலும் ஐக்­கிய அமெ­ரிக்­காவின் கென்சாஸ் பல்­க­ழைக்­க­ழ­கத்தில் முது­மானி பட்­டத்­தையும் முடித்­துள்ளேன். 

கேள்வி: முன்னாள் மத்­திய வங்கி ஆளுனர் அர்­ஜூன மகேந்­தி­ரனின் காலத்­துக்கு முன்னர் ஒரே மாதத்தில் அதி­க­ளவில் பங்­குகள் விற்­கப்­பட்­டுள்­ளதா?

பதில்: ஆம். அவ்­வாறு நடை­பெற்­றுள்­ளது.

கேள்வி: மத்­திய வங்­கியின் முன்­னறை, இடை­நிலை அறை, பின்­ன­றையில் இடம்­பெற்ற இட­மாற்­றங்கள் அனைத்தும் உங்­க­ளுக்கு தெரியும் அல்­லவா?

பதில்: ஆம் தெரியும்.

கேள்வி: அப்­போது ஏன் முன்­ன­றையில் பணி­பு­ரிந்த உத­ய­சீலன், பது­ம­நாதன் ஆகி­யோரின் இட­மாற்­றத்­துக்கு எதிர்ப்பு தெரி­வித்­தீர்கள்?

பதில்: எனது திணைக்­க­ளத்தில் அவர்கள் மிகவும் திற­மை­யாக செயற்­பட்டு வந்­தார்கள். கல்­வித்­த­ரமும் அதி­க­மாக இருந்­தது. அத்­தோடு அவர்­களை இட­மாற்றம் செய்­வ­தற்­கான எந்­த­வொரு தேவையும் அப்­போது ஏற்­பட்­டி­ருக்­க­வில்லை.

கேள்வி:இட­மாற்றம் செய்­வ­தற்­கான தேவையை நீங்கள் எவ்­வாறு தீர்­மா­னிப்­பீர்கள்?

பதில்: நான் தீர்­மா­னிக்­க­வில்லை. எனது அபிப்­பி­ரா­யத்தை கூறினேன்.

கேள்வி: அவ்­வா­று­தானே முன்னாள் மத்­திய வங்கி ஆளுனர் அர்­ஜூன மகேந்­தி­ரனும் தனது கருத்தை தெரி­வித்­தி­ருப்பார்.

பதில்: எனது கருத்தை அவர் கேட்­க­வில்லை

கேள்வி: எனது கருத்தை கேட்­க­வில்லை என்­ப­தற்கும் அச்­சு­றுத்­தினார் என்­ப­தற்கும் வித்­தி­யாசம் உள்­ள­தல்­லவா?

பதில்: வாய்­வார்த்­தை­களின் மூல­மாக என்னை அச்­சு­றுத்­தினார்.   எனது செயற்­பா­டு­க­ளுக்கு இடை­யூறு விளை­விப்­ப­வர்­களை நான் அச்­சு­றுத்­தினார் என்­றுதான் கூறுவேன். அத்­தோடு பல­முறை ‘நான் சொல்­வதை செய்” என கண்­டிப்­புடன் கூறி­யி­ருக்­கின்றார். எனவே அது எனக்கு அச்­சு­றுத்­தல்தான்.

கேள்வி: கேள்­வி­மனு மற்றும் விலை­ம­னுக்­கோரல் தொடர்பில் உங்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்ள பத்­தி­ரங்­களை பரி­சீ­லனை செய்­வது நீங்­களா?

பதில்: ஆம்

கேள்வி: இது தொடர்பில் மத்­திய வங்­கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்­திரன் ஏதேனும் கட்­ட­ளை­யிட்­டாரா?

பதில்: ஆம். அனைத்து பத்­தி­ரங்­க­ளையும் அவ­ரது அறைக்கு அனுப்­பாமல் அவ­சி­ய­மான அறிக்­கை­களை மட்டும் அனுப்புமாறு கூறினார்.

கேள்வி: அந்த அறிக்கைகளில் இறுதி கையொப்பமிடுவது யார்?

பதில்: நான்தான். 

கேள்வி: அப்படியானால் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனின் கேள்வி கேட்க வேண்டுமானால் உங்களிடம்தானே கேட்க வேண்டும்?

பதில்: ஆம்

கேள்வி: அதனை செய்தமைக்கு அச்சுறுத்தலாக நினைப்பது எவ்வாறு முறையாகும்?

பதில்: எனது பணியில் நான் தவறிழைத்தில்லை. எனக்கு கீழ் வேலை செய்யும் ஊழியர்களும் திறமையானவர்கள்.  எனவே அவர்களை இடமாற்றம் செய்தமையாலேயே நான் அவ்வாறு கூறினேன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04