மாத்தறையிலிருந்து மருதானை நோக்கி வந்த கடுகதி ரயிலின் இயந்திரம் மாத்தறை கம்புருகமுவ பகுதியில் வைத்து தீப்பற்றி எரிந்துள்ளது.

கடுகதி ரயில் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ரயில் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் தீப்பற்றிய ரயில் இயந்திரத்துக்கு பதிலாக வேறொரு ரயில் இயந்திரத்தை பொருத்தி கம்புருகமுவ ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாத்தறை கம்புருகமுவ ரயில் நிலையம் கொழும்பு ரயில் கட்டுப்பாட்டு நிலையத்துக்கு தகவல் வழங்கியுள்ளது.