'வடக்கில் சிறந்த பொலிஸாரை கடமையிலீடுபடுத்த ஜனாதிபதியும் பிரதமரும் முன்வரவேண்டும்'

Published By: Priyatharshan

01 Aug, 2017 | 05:52 PM
image

ஜனாதிபதியும் பிரதமரும் சிறந்த நிர்வாகத்தையும்,நேர்மை பண்புகளையும் கொண்ட பொலிசாரை வடக்கு கிழக்கு பிரதேசங்களில் நிறுத்தி போதைவஸ்து கடத்தல், வாள்வெட்டு சம்பவங்களை நிறுத்துவதற்கு முன்வரவேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்டத்திற்கு இருநாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர யாழ்.மாவட்டத்தில் வாள்வெட்டு சம்பவங்கள் அதிகரித்திருக்கும் நிலையில் அவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக முப்படையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பயன்படுத்தப்படுவார்கள் என கூறியிருக்கும் கருத்து தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ்.மாவட்டத்தில் வாள்வெட்டு சம்பவங்களை காரணம் காட்டி முப்படைகளை பயன்படுத்துகின்ற நடவடிக்கையை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருபோதும் ஏற்கமாட்டாது எனவும் அவர் தெரிவித்தார்.  

பொலிஸார் நேர்மையாகசெயற்பட்டால் வாள்வெட்டு குழுக்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தலாம். பொலிஸார் நேர்மையாக செயற்பட்டால் பொதுமக்களும் தங்கள் பூரணமான ஒத்துழைப்பை வழங்குவார்கள். இவ்வாறான வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் நிறுத்த பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19