வறட்சியால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்களின் நலன்புரி செயற்பாடுகளை ஆராய்ந்து பார்ப்பதற்கு இராணுவ அலுவலர்கள்

Published By: Robert

01 Aug, 2017 | 01:17 PM
image

வறட்சியால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்களின் நலன்புரி செயற்பாடுகளை ஆராய்ந்து பார்ப்பதற்காக பிரதேச செயலக பிரிவு மட்டத்தில் இராணுவ அலுவலர்களை நியமிக்குமாறு தொடர்புடைய தரப்பினருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். 

இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்குறித்த ஆலோசனையை வழங்கினார்.

அண்மையில் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு காரணமாக அனர்த்தத்துக்கு உள்ளான மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்ட அனர்த்த முகாமைத்துவ செயற்பாடுகளின் தற்போதைய நிலை மற்றும் முன்னேற்ற மீளாய்வுக்காக இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

தற்போது கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேச மக்களின் நலன்புரி செயற்பாடுகள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன் அந்த மக்கள் பல அன்றாட வாழ்க்கை பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளதனால் அவை தொடர்பில் ஆராய்ந்து பார்த்து அவர்களுக்கு உதவ வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும் என்று ஜனாதிபதி தெரிவித்தார். 

அம்மக்களின் குடிநீர் மற்றும் ஏனைய தேவைகளை நிறைவேற்றுவதற்கான நிதி உரிய நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த செயற்பாடுகளை மேற்பார்வை செய்யுமாறு ஜனாதிபதி அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். அத்துடன் அவர்களுக்கு உலருணவு வழங்குவதற்கு தான் தீர்மானித்துள்ளதாகவும் அதற்கான முன்மொழிவு இன்று  அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

உயர்தரமான உணவுப்பொருட்களை அந்த மக்களுக்கு வழங்க வேண்டிய தேவையை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, மேற்பார்வை குழுக்களை நியமித்து அந்த செயற்பாடுகளை மேற்பார்வை செய்யுமாறும் ஆலோசனை வழங்கினார்.

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் வீடுகளை இழந்த மக்களை மீள்குடியேற்றுவதற்காக மாற்றுக் காணிகளை இனங்காணுதல் மற்றும் அக் காணிகளை விடுவித்தல் தொடர்பான நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. காணிகளை இனங்காணும் செயற்பாடுகளை இம்மாதம் 15 ஆம் திகதிக்குள் நிறைவு செய்ய வேண்டுமெனவும், அது தொடர்பில் ஏதாவது பிரச்சினை இருந்தால் நாளைய தினத்துக்குள் எழுத்து மூலம் சமர்ப்பிக்குமாறும், காணிகளை இனங்கண்ட பின்னர் அக்காணிகளை பயனாளிகளுக்கு வழங்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50