கட்டுநாயக்க விமான நிலையத்தில் வல்லப்பட்டைகளைக் கடத்த முற்பட்ட நபர் ஒருவரை விமானநிலைய சுங்கப்பிரிவினர் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.

இலங்கையிலிருந்து சென்னைக்கு விமானத்தினூடக 8 கிலோ 400கிராம் வல்லப்பட்டைகளை கடத்த முட்பட்ட 27 வயதுடைய இளைஞரையே கட்டுநாயக்க விமானநிலைய சுங்கப்பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட வல்லப்பட்டைகளின் பெறுமதி 5 இலட்சத்து 46 ஆயிரம் ரூபாவென சுங்கப்பிரிவினர் தெரிவித்தனர்.

வல்லப்பட்டையுடன் கைதுசெய்யப்பட்ட நபருக்கு  56 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.