வர்த்தக நாம அணிகள் போட்டியிடும் மேர்கண்டைல் கரப்பந்தாட்டம்

Published By: Robert

01 Aug, 2017 | 12:09 PM
image

தேசிய விளை­யாட்­டான கரப்­பந்­தாட்­டத்தை, இலங்­கையின் வர்த்­தகத் துறை­யி­ன­ரி­டையே பிர­பல்­யப்­ப­டுத்தும் நோக்­கிலும், நிறு­வ­னங்­க­ளி­டையே புரிந்­து­ணர்வை அதி­க­ரிக்கும் வகை­யிலும், இலங்கை வர்த்­தக கரப்­பந்­தாட்ட சங்கம், வரு­டாந்த மேர்கண்டைல் கரப்­பந்­தாட்ட சுற்றுத் தொடரை இம்­மு­றையும் ஏற்­பாடு செய்­துள்­ளது. 

கடந்த வருடம் 100 இற்கும் மேற்பட்ட அணிகள் இச்சுற்றுத் தொட ரில் கலந்து கொண்­டன. இவ்­வ­ருடம் அதையும் தாண்­டிய பங்­க­ளிப்­பினை சங்கம் எதிர்­பார்க்­கின்­றது.

ஆண்,- பெண் இரு பாலாரும் பங்­கு­பற்றும் இப்­போட்டித் தொட­ரா­னது, தேசிய விளை­யாட்டு சட்ட திட்­டங்­க­ளுக்கு அமைய இடம்­பெ­று­கி­ன்றது.

ஆரம்­ப­கட்ட சுற்­றுப்­போட்­டிகள் மஹ­ர­கம இளைஞர் சேவைகள் மன்­றத்தில் எதிர்­வரும் 18, 19 மற்றும் 20 ஆம் திக­தி­களில் நடை­பெ­ற­வுள்­ளன. இறுதிப் போட்­டிகள் மஹ­ர­கம இளைஞர் சேவைகள் மன்­ற­த்தின் உள்­ளக அரங்கில் எதிர்­வரும் செப்­டம்பர் மாதம் 16 மற்றும் 17 ஆம் திக­தி­களில் நடை­பெறும்.

இதில் பங்­கு­பற்­று­வ­தற்குத் தகுதி பெற, போட்­டியில் கலந்து கொள்ளும் ஊழி­யர்கள் குறித்த நிறு­வ­னத்தில் குறைந்­த­பட்சம் இரண்டு மாதங்­க­ளேனும் பணி­யாற்­றி­யி­ருக்க வேண்டும். 

சுற்றுத் தொடர்கள் சுப்பர் லீக், சம்­பியன் மற்றும் டிவிஷன் ஏ ஆகிய மூன்று பிரி­வு­களில் இடம்­பெறும். 

மொத்தப் பரிசுத் தொகை 1.5 மில்­லியன் ரூபா­வுக்கும் அதி­க­மாகும். மிகச் சிறந்த வீராங்­க­னைக்கு ஸ்கூட்டி ஒன்றும், வீர­ருக்கு மோட்டார் சைக்­கிள் ஒன்றும் பரி­சாக வழங்­கப்­படும். 

விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதி 2017 ஆகஸ்ட் 9 ஆகும். மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள - 0710682682, 0776485456 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35