யாழ்ப்பாணம் கொக்குவில் நந்தாவில் பகுதியில் பொலிஸார் மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொண்டவர்களில் இருவரை பொலிஸார் சந்தேகத்தில் கைதுசெய்துள்ளனர்.

கடந்த 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரு பொலிஸார் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய சந்தேகத்தின் பேரிலேயே குறித்த இருவரும் இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் இருவரும் 20 மற்றும் 23 வயதுடைய இளைஞர்கள் எனத் தெரிவிக்கும் பொலிஸார் ஏனையவர்களை கைதுசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.