பாகிஸ்தான் தூது­வ­ரி­டத்தில் கோரிக்கை

Published By: Robert

01 Aug, 2017 | 11:26 AM
image

பாகிஸ்­தா­னுக்கு வெற்­றிலை ஏற்­று­மதி செய்­ப­வர்கள் எதிர்­கொள்ளும் தீர்வை தொடர்­பான பிரச்­சி­னைக்கு உரிய தீர்­வினை பெற்­றுத்­த­ரு­மாறு அமைச்சர் ரிஷாட் பதி­யூதீன் இலங்­கைக்­கான பதில் பாகிஸ்தான் தூது­வ­ரி­டத்தில் கோரிக்கை விடுத்­துள்ளார்.

வெற்­றி­லையை இலங்­கை­யி­லி­ருந்து பாகிஸ்­தா­னுக்கு ஏற்­று­மதி செய்­வ­தற்­காக, அந்த நாடு இறக்­கு­மதி வரியை மேலும் அதி­க­ரித்­துள்­ள­மையால் வெற்­றிலை உற்­பத்­தி­யா­ளர்­க­ளுக்கு  ஏற்­பட்­டுள்ள பாதிப்­புக்கள் குறித்து, கைத்­தொழில் வர்த்­தக அமைச்சர் ரிஷாட் பதி­யூதீன் மற்றும் பாகிஸ்தான் பதில் தூதுவர் அஹ­மட்கான் சிப்­றா­விற்கும் இடையில் நேற்று திங்­கட்­கி­ழமை சந்­திப்­பொன்று இடம்­பெற்­றது.

இதன்­போது கருத்து வெளியிட்ட அமைச்சர் ரிஷாத் பதி­யூதீன்  இந்த விட­யத்தை பாகிஸ்தான் அர­சாங்கம் சாத­க­மாக பரி­சீ­லித்து, வெற்­றிலை ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளுக்கும், உற்­பத்­தி­யா­ளர்­க­ளுக்கும் நன்மை பயக்க வேண்டும். கடந்த ஜூலை ­மாதம் தொடக்கம் இவ்­வா­றான மேல­திக இறக்­கு­மதி வரியை பாகிஸ்தான் அரசு அமுல்­ப­டுத்­தி­யி­ருப்­ப­தனால் வெற்­றிலை உற்­பத்­தி­யா­ளர்கள் தமது உற்­பத்திச் செல­வைக்­கூட ஈடுசெய்­ய ­மு­டி­ யாத நிலை ஏற்­பட்­டுள்ளது. இலங்­கையில் வட­மேல்­மா­கா­ணத்தில் புத்­தளம், குரு­ணாகல் போன்ற மாவட்­டங்­க­ளி­லேயே வெற்­றிலை உற்­பத்தி பெரு­ம­ளவில் இடம்­பெற்­று­வ­ரு­கி­றது. இலங்­கை­யா­னது பாகிஸ்­தா­னுக்கு மட்­டுமே வெற்­றி­லையை ஏற்­று­மதி செய்­யப்படுகின்­றது. ஒரு கிலோ கிராம் வெற்­றி­லைக்கு பாகிஸ்தான் ரூ.200 (இலங்­கையின் 291ரூபா)  மேல­தி­க­வரி அற­வி­டப்­ப­டு­கின்­றது. இந்த விட­யத்தை பாகிஸ்தான் அரசு மீள்­ப­ரி­சீ­லனை செய்து வெற்­றிலை உற்­பத்­தி­யா­ளர்­களை ஊக்­குவிக்க­ வேண்டும் என  பதி­யூர்தீன் கேட்­டுக்­கொண்டார்.

இவற்றைக் கேட்­ட­றிந்­து­கொண்ட பாகிஸ் தான் பதில் தூதுவர், இந்த விவ­காரம் தொடர்­பாக, பாகிஸ்தான் அரசின் கவ­னத்­திற்கு கொண்டு வந்து உரிய நட­வ­டிக்கை எடுப்­ப­தா­கவும் காத்­தி­ர­மான முடி­வொன்றை பெற்றுத்தருவதாகவும் உறுதியளித்தார். 

இந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் கராச்சியில் நடைபெறவுள்ள இலங்கை - பாகிஸ்தான் கூட்டுப் பொருளாதார  ஆணைக்குழு  மாநாடு தொடர்பிலும் இவ்விடயம் கலந்துரையாடப்பட்டமை குறிப் பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04