ஆயுத குழுக்கள் மீது எதிர்த்­தாக்­குதல் நடத்த வடக்கு பொலிஸார் அச்சம்

Published By: Robert

01 Aug, 2017 | 01:10 PM
image

யாழ்ப்­பா­ணத்தில் பொலிஸார் மீதான தாக்­குதல் அதி­க­ரித்­துள்­ளது. தீவி­ர­வா­தி­களின் ஆரம்ப காலமும் இவ்­வாறுதான் இருந்­தது.  எனவே பிர­தமர் பார­தூர தன்­மையை விளங்­கிக்­கொள்­ளா­விடின் விலகி  செல்ல வேண்டும் என தூய்­மை­யான ஹெல உறு­மய அமைப்பு தெரி­விக்­கின்­றது.

Image result for உதய கம்பன்பில virakesari

அதே­நேரம் வடக்­கிலுள்ள பொலிஸார் மீது ஆயுத தாக்­குதல் நடத்­து­கின்ற போது எதிர்­தாக்­குதல் நடத்த பொலிஸார் அச்­சப்­ப­டு­கின்­றனர் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். கொழும்பில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பி­லேயே தூய்மையான ஹெல உறுமய அமைப்பின் தலைவர் உதய கம்பன்பில மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

யாழ்ப்­பா­ணத்தில் ஆயு­தக்­கு­ழுக்­க­ளினால் பொலிஸார் இருவர் மீது தாக்­குதல் நடத்­தப்­பட்­டது. இதற்கு முன்பு பொலிஸ் அதி­காரி ஒருவர் துப்­பாக்கிச் சூட்­டிற்கு இலக்­காகி உயி­ரி­ழந்தார். 6 மாதங்­க­ளுக்கு முன்பு மற்­று­மொரு பொலிஸ் அதி­காரி ஆவா குழுவின் ஆயுத தாக்­கு­த­லுக்கு இலக்காகினார்.

இவ்­வா­றான ஆயுத குழுக்கள் தாக்­குதல் நடத்­தி­னாலும் எதிர் தாக்­குதல் நடத்­து­வ­தற்கு பொலிஸார் அச்­சப்­ப­டு­கின்­றார்கள். காரணம் பொலிஸ் ஆணையை பொருட்­ப­டுத்­தாமல் பயன்­ப­டுத்­திய இரு வாக­னங்கள் மீது துப்­பாக்­கிச்­சூடு நடத்­திய பொலி ஸார் இருவர் இன் றும் சிறையில் இருக்­கின்­றார்கள்.

 1980    ளில் வடக்கில் தீவி­ர­வாத சக்­திகள் செயற்­பா­டுகள் ஆரம்­பித்­த­போது அங்கு சேவை­யி­லி­ருந்து பொலிஸ் அதி­கா­ரி­களை கொன்­று ­கு­விப்­ப­தையே முதலில் செய்­தார்கள். இன்று 35 வரு­டங்­களின் பின்பு 1980 களில் இருந்த நிலை­மையை நோக்கி இலங்கை மீண்டும் நகர்­வ­தா­கவே எமக்கு தெரி­கின்­றது. வடக்கு, கிழக்கில் மீண்டும் இவ்­வா­றான அரா­ஜக செயற்­பா­டுகள் இடம்­பெ­று­வ­தற்­காக அப்­ப­கு­தியை இரா­ணு­வத்­தினர் மீட்­க­வில்லை. 

இரா­ணு­வத்தை பாது­காப்போம் என்று ஊட­கங்­களின் முன்னால் பேசிக்­கொண்டால் மாத்­திரம் போது­மா­ன­தல்ல. தற்­போது வடக்கில் இரா­ணு­வத்­தி­ன­ருக்கு அச்­சு­றுத்தல் ஏற்பட்டுள்ளது. 

எனவே றோயல் கல்லூ ரியில் கற்ற பிரதமருக்கு அக்கல்லூரியின்  இலக்கை மீண்டும் நினைவு படுத்துகின்றேன். கற்றுக் கொள்ளுங்கள் இல்லாவிட்டல் வெளியே செல்லுங்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02