யாழில் முப்படையின் உதவியுடன் இறுக்­க­மான பாது­காப்பு திட்டம்

Published By: Priyatharshan

01 Aug, 2017 | 10:48 AM
image

யாழ். குடாவில் இடம் பெறும் சட்ட விரோத செயல்­களைக் கட்­டுப்­ப­டுத்­தவும் அங்கு பாது­காப்பை உறுதி செய்­யவும்  இரா­ணுவம், கடற்­படை, விமா­னப்­ப­டை­யி­ன­ருடன் பொலிஸ் விஷேட அதி­ர­டிப்­ப­டை­யி­ன­ரையும்  இணைத்து இறுக்­க­மான பாது­காப்பு கட்­ட­மைப்­பொன்றை  செயற்­ப­டுத்தப் போவ­தாக பொலிஸ் மா அதிபர் பூஜித ஜய­சுந்­தர அறி­வித்­துள்ளார்.

யாழ்ப்­பாணம் கொக்­குவில் பகு­தியில் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் இருவர் மீது  மோட்டார் சைக்­கிள்­களில்  வந்த  கும்­ப­லொன்று  துரத்தி துரத்தி வாள்­வெட்டுத் தாக்­கு­தல்­களை மேற்­கொண்­ட­தை­ய­டுத்து நேற்று  யாழ். குடா­வுக்கு அவ­சர  விஜயம் ஒன்­றினை முன்­னெ­டுத்து அங்கு ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே   பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர இந்த பாது­காப்பு கட்­ட­மைப்பு தொடர்­பி­லான விட­யங்­களை அறி­வித்தார். 

யாழின் பாது­காப்பு  தொடர்பில் இறுக்­க­மான திட்­ட­மொன்­றினை கையாள வேண்­டிய கட்­டா­யத்தில் பொலிஸார் உள்­ள­தா­கவும் அவர்   சுட்­டிக்­காட்­டினார்.

இந்த ஊடக சந்­திப்பில் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர மேலும் தெரி­விக்­கையில் 

'பொலிஸார் மீதான வாள்­வெட்டு தாக்­குதல் சம்­ப­வத்­துடன், தொடர்­பு­டைய பிர­தான சந்­தே­க­நபர் முன்னாள் விடு­தலைப் புலிகள் இயக்க உறுப்­பினர் ஆவார். அவர் ஆவா குழு­வுடன் இணைந்து செயற்­பட்டு வரு­கின்றார். அத்­துடன், இந்த சம்­ப­வத்­துடன், தொடர்­பு­டைய மேலும் ஆறு பேர் அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளனர்.  சமூக விரோத செயற்­பா­டு­களில் ஈடு­பட்­டுள்ள நபர்­களை கைது செய்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

சந்­தேக நபர்கள் பொலி­ஸாரை விரட்டி விரட்டி தாக்­கி­யுள்­ளனர். அவர்கள் அதிக வலு கொண்ட மோட்டார் சைக்­கிள்­களில் வருகை  தந்­துள்­ளனர். சந்­தேக நபர்­களைக் கைது செய்ய நட­மாடும்  பொலிஸ் பிரிவு,  விஷேட தேடுதல் நட­வ­டிக்­கைகள் ஊடாக நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. விஷேட அதி­ரடிப் படை­யினர் இது தொடர்பில் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­துடன் இரா­ணுவம், கடற்­படை, விமா­னப்­படை ஆகி­ய­வற்றின் ஒத்­து­ழைப்பும் பெற்­றுக்­கொள்­ளப்­படும்.

 யாழ். குடா முழு­வதும் பூர­ண­மாக எமது கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வரப்­ப­டு­கின்­றது. ஏனெனில் இது­வரை நாம் இறுக்­க­மான பாது­காப்பு விதி­மு­றை­களை அமுல் செய்­ய­வில்லை. அவ்­வாறு இறுக்­க­மான விதி­மு­றை­களை அமுல் செய்யும் போது பொது­மக்கள் அதனை தாம் சுதந்­தி­ர­மாக நட­மா­டு­வ­தற்கு இடை­யூ­றாக கருதக் கூடும். அத­னா­லேயே அவ்­வாறு  இது­வரை நாம் நடந்­து­கொள்­ள­வில்லை. எனினும் தற்­போது நிலைமை மோச­மாக உள்­ளது. 

தற்­போ­தைய நிலைமை பொது மக்­களை சார்ந்­த­தாக இல்லை.  அப்­பாவி பொது மக்­களும் இங்கு சேவை  செய்யும் அரச உத்­தி­யோ­கத்­தர்­களும் அச்­சத்­துடன் உள்­ளார்கள்.  பொலி­ஸாரும் அச்­சு­றுத்­த­லுக்கு முகம் கொடுத்­துள்­ளனர்.

அதனால் நாம் களத்தில் இறங்கி நட­வ­டிக்கை எடுத்தே ஆக வேண்டும். ஏனெனில் இவ்­வா­றான விரும்­பத்­த­காத அச்­சு­றுத்தல் நட­வ­டிக்­கைகள் ஒன்றன் பின் ஒன்­றாக தொடர்­கின்­றன. இதனை அனு­ம­திக்க முடி­யாது. இனி மேல் இவ்­வாறு  இடம்­பெ­று­வ­தற்கு ஒரு­போதும் அனு­ம­திக்க முடி­யாது.

தேசிய பாது­காப்பு, பிர­தே­சத்தின் பாது­காப்பு என்­ப­வற்றை  உறுதி செய்­வதும்  அச்­ச­மின்றி பொது மக்கள் நட­மாடக் கூடிய சூழலை ஏற்­ப­டுத்­து­வதும் பொலி­ஸா­ரா­கிய எமது  பொறுப்­பாகும். இங்கு தற்­போது ஒரு  வித்­தி­யா­ச­மான நிலைமை   உள்­ளது. எனவே அதனை வெற்­றி­கொள்ள பிரத்­தி­யே­க­மான வித்­தி­யா­ச­மான மூலோ­பா­யங்­களை  நாம் கையாள உள்ளோம்.

 காங்­கே­சன்­துறை பொலிஸ் பிராந்­தியம், யாழ். பொலிஸ் பிராந்­தி­யங்­களில் உள்ள 17 பொலிஸ் நிலை­யங்­களை உள்­ள­டக்கி, பொலிஸ் உயர் அதி­கா­ரி­க­ளையும் அறி­வு­றுத்தி இந்த மூலோ­பா­யங்கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும். இன்று ( நேற்று) இதற்­கான ஆலோ­ச­னை­களை தனித்­த­னி­யாக உயர் பொலிஸ் அதி­கா­ரி­க­ளுக்கும், இவ்­வா­றான நிலை­மையை எவ்­வாறு கையாள வேண்டும் என்­பது குறித்து ஏனைய அனை­வ­ருக்கும் ஆலோ­சனை வழங்­க­வுள்ளேன்.

நாம் ஒன்­றி­ணைந்த ஒரு நட­மாடும் நட­வ­டிக்கை, தேடுதல் வேட்டை, உள்­ளிட்­ட­வற்றை முன்­னெ­டுப்போம். விஷேட அதி­ர­டிப்­ப­டை­யி­ன­ருடன் ஏனைய ஆயுதப் படை­க­ளையும் இதில் இணைத்து செயற்­ப­ட­வுள்ளோம்.  இவ்­வா­றான சமூக விரோத செயல்­களில் ஈடு­படும் தவ­றான நட­வ­டிக்கை உள்ள கடைசி நபரை  கைது செய்யும் வரை இந்த நட­வ­டிக்கை தொடரும்.

பொது மக்கள் அச்­ச­மின்­றியும் சுதந்­தி­ர­மா­கவும் வாழக் கூடிய சூழலை ஏற்­ப­டுத்த வேண்டும். இது எமது கடமை.  அதனால் நாம் பொது மக்­க­ளிடம் இவ்­வா­றான நட­வ­டிக்­கைகள் இங்கு நடப்­பது தொடர்பில் மன்­னிப்பு கேட்­கின்றோம்.

 நாம் அனை­வரும்  இலங்­கை­யர்கள். எம்­மிடம் பிர­தேச, மத, இன வேறு­பா­டுகள்  இருக்க முடி­யாது. பெரி­யவர் சிறி­யவர், ஆண், பெண், கற்­றவர் கற்­கா­தவர் என எமக்கு எந்த வேறு­பாடும் இருக்­காது. நாம் மனித நேயத்­துடன் எல்லா விட­யத்­தையும் அனுக வேண்டும்.

ஜனா­தி­ப­தியும், பிர­த­மரும், சட்டம் ஒழுங்கு அமைச்­சரும் மிகத் தெளி­வான அறி­வு­றுத்­தல்­களை யாழ். விவ­காரம் தொடர்பில் எமக்கு அளித்­தி­ருக்­கின்­றார்கள். எனவே நாம் அதி­ர­டிப்­ப­டை­யி­ன­ரையும் ஆயுதப் படை­யி­ன­ரையும் இணைத்து மிகத் தெளி­வான இறுக்­க­மான உறுதியான பாதுகாப்பு கட்டமைப்பொன்றை ஏற்படுத்தவுள்ளோம்.

 எனவே இந்த சட்ட விரோத அச்சுறுத்தல் செயற்பாடுகளை ஒழிக்க பொது மக்கள் எமக்கு ஒத்துழைக்க வேண்டும். அவர்கள் தொடர்பில் தகவல் தர வேண்டும். தகவல் தருவோரின் இரகசியம் காக்கப்படும்.  நீங்கள் எனக்கே நேரடியாக தகவல் தரலாம். அல்லது வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு தகவல் தரலாம். அல்லது யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு தகவல் வழங்கலாம். மக்கள் சுதந்திரமாக வாழக் கூடிய அமைதியான சூழலை ஏற்படுத்துவதே எமது இலக்கு என்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46