DSI நிறுவனம், தனது லோயல்டி நிகழ்ச்சியை மீள் ஆரம்பிக்க Star Points உடன் ஒன்றிணைந்து வாடிக்கையாளர்களுக்கு வித்தியாசமானதோர் லோயல்டி அனுபவத்தைப் பெற்றுக் கொடுக்கிறது. இது தொடர்பான ஆரம்ப நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

இந்த லோயல்டி திட்டத்தின் மூலம், அங்கத்தவர்கள் வருடம் முழுவதும் பெருமளவு நன்மைகளையும், சலுகைகளையும் பெற்றுக்கொள்ள முடியும். மேலும், நாடு தழுவிய ரீதியில் காணப்படும் DSI காட்சியறைகளில் இந்த லோயல்டி திட்டத்துடன் இணைந்துகொள்ள விரும்பும் எவரும் தன்னை பதிவு செய்து கொண்டு, Star Points களைச் சம்பாதிக்கவும், செலவிடவும் அவர்களால் முடிகிறது. DSI காட்சியறைகளில் செலவிடப்படும் ஒவ்வொரு 100 ரூபாவுக்கும் ஒரு Star Points வழங்கப்படும். இதன் பெறுமதி ஒரு ரூபாவாகும். இந்தத் திட்டத்தின் மூலம், அங்கத்தவர்கள் ஏனைய வர்த்தக நிலையங்களிலும் Star Points களைச் சம்பாதிக்கவும், செலவிடவும் வாய்ப்பை பெற்றுக் கொள்கின்றனர்.

டி செம்சன் அன்ட் சன்ஸ் பிரைவெட் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. துஷித ராஜபக்ஷ இதுபற்றிக் கருத்து வெளியிடுகையில்,

“வாடிக்கையாளர்களை நோக்கிய நிறுவனமொன்றான டி செம்சன் அன்ட் சன்ஸ் பிரைவெட் நிறுவனம், வாடிக்கையாளர்களை அனைத்தையும்விட முக்கியமாகக் கருதுகின்றது. இதனால்,Star Points உடன் ஒன்றிணைந்து நாம் எப்போதும் முக்கியமாகக் கருதும் எமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த விலைக் கழிவுகளையும், ஏனைய அனுகூலங்களையும் பெற்றுக்கொடுக்க இந்த வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொடுக்கின்றோம்’ என்று கூறினார்.

டயலொக் ஆசிஆட்டா நிறுவனத்தின் குழுமப் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. சுப்புன் வீரசிங்க தகவல் தருகையில்,

 ‘‘DSI உடன் இணைந்து கொள்வதை நாம் மிகவும் மகிழ்ச்சியுடன் எற்றுக்கொள்கின்றோம். இலங்கையின் மிகவும் பிரபல்யமான மற்றும் பரந்த வலையமைப்பு ஒன்றைக் கொண்டுள்ள நிறுவனமாகிய இது, தனது லோயல்டி வேலைத் திட்டத்திற்கு Star Points ஐ இணைத்துக் கொண்டுள்ளது. இந்த லோயல்டி வேலைத் திட்டத்தின் மூலம் DSI வாடிக்கையாளர்கள் விசேட வெகுமதிகளையும், நம்ப முடியாத விலைக்கழிவுகளையும் பெற்றுக்கொள்கின்றனர். 200 க்கும் மேற்பட்ட நாடு தழுவிய DSI காட்சியறைகளில் நாட்டின் மிகப்பெரிய லோயல்டி வலையமைப்பான Star Points களைச் சம்பாதிக்கவும் செலவிடவும் அவர்களால்  முடிகிறது’ என்று கூறினார். பல்வேறுபட்ட விசேட வர்த்தகப் பெயர்கள் Star Points வலையமைப்புடன் தொடர்ந்து ஒன்றிணைவதுடன், இலங்கை வாடிக்கையாளர்களுக்கு அன்றாட கொள்வனவுகளின் போது மிகச்சிறந்த அனுகூலங்களைப் பெற்றுக்கொடுக்க இதன் மூலம் நாம் எதிர்பார்க்கின்றோம்’ என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையின் கையடக்கத் தொலைபேசி அடிப்படையிலான லோயல்டி வலையமைப்பு ஒன்று என்ற ரீதியில், முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட, நாட்டின் மிகப் பெரிய வலையமைப்பு Star Points ஆகும். அனைத்து Star Points வாடிக்கையாளர்களும் நாடு தழுவிய ரீதியிலுள்ள வர்த்தகப் பங்காளர் நிலையங்களில் Star Points களைச் சம்பாதிக்க முடியும். 400 க்கும் மேற்பட்ட வர்த்தகப் பங்காளர் நிலையங்களின் 2,000 க்கும் மேற்பட்ட நாடு தழுவிய விற்பனை நிலையங்களில் Star Points களைச் சம்பாதிக்க முடியும். வீட்டுத் தளபாடங்கள், இலத்திரனியல் உபகரணங்கள், சில்லறைப் பொருட்கள் கொள்வனவு, பாதணிகள் மற்றும் ஆடை அணிகள், வலையமைப்புக்கள், உணவு மற்றும் மென்பானங்கள், அழகுசாதனப் பொருட்கள், சுகாதாரத்துறை, உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணங்கள் ஆகிய துறைகளை உள்ளடக்கிய பல்வேறு வர்த்தகப் பங்காளர் நிறுவனங்களை வலையமைப்பு கொண்டுள்ளது.

DSI செம்சன் குழுமத்தின் பிரதம சந்தைப்படுத்தல் மற்றும் விநியோக நிறுவனமான செம்சன் அன்ட் சன்ஸ் பிரைவட் நிறுவனம், நாட்டின் மிகப்பெரிய வலையமைப்பு ஒன்றைக் கொண்டுள்ளது. பாதணிகள், ஏனைய உற்பத்திகள் மற்றும் ஆடைத் தயாரிப்புக்களை உள்நாட்டு வாடிக்கையாளர்களுக்குப் பெற்றுக்கொடுக்கிறது.

உள்நாட்டு பாதணி வர்த்தகப் பெயர்களான DSI, றண்பா, செம்சன்ஸ், ஜெஸிகா, வேவ்ஸ், பீட், சுப்பர்ஸ்போட் மற்றும் AVI ஆகியவற்றுக்கும், சர்வதேச ரீதியில் பிரசித்தி பெற்ற வர்த்;தகப் பெயர்களான றீபொக், பூமா, பிலா, கிளார்க்ஸ், புளோஷீம், ரெட்டேப், அரோவ், US போலோ, டப்ளியூ மற்றும் அவ்ரேலியா ஆகியவற்றின் ஏக விநியோகத்தராகச் செயற்படுகிறது.

நாடளாவிய ரீதியில் 200 க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களையும், 4,000 விநியோகத்தர்களையும், 39 விற்பனைப் பிரதிநிதிகளையும் வலையமைப்பு கொண்டுள்ளது.