கார் அதிசக்தி வாய்ந்த மின்சார கம்பத்தூணுடன் மோதி விபத்து : நான்கு பேர் வைத்தியசாலையில்

Published By: Robert

31 Jul, 2017 | 03:11 PM
image

அட்டன் கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை பதுபொல எனும் இடத்தில் இன்று காலை 10.40 மணியளவில் கார் ஒன்று அதிசக்தி வாய்ந்த மின்சார கம்பத்தூணுடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் நான்கு பேர் படுங்காயம்பட்டு கினிகத்தேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

குறித்த கார் கட்டுநாயக்கவிலிருந்து கினிகத்தேனை அலகல பகுதியை நோக்கி செல்லும் வழியிலேயே இவ்வாறு வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

சாரதிக்கு உறக்கம் ஏற்பட்டதன் காரணமாக இவ்விபத்து நேர்ந்திருக்கலாம் என  விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும் காரில் பயணித்த 50 வயது மதிக்கதக்க பெண் ஒருவரும், மூன்று இளைஞர்களும் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

மேற்படி கார் அதிசக்தி வாய்ந்த மின்சார கம்பத்தூணுடன் மோதுண்டதனால் மின்சார கம்பம் சேதத்திற்குள்ளாகியுள்ளது. இதனால் அப்பிரதேசத்திற்கு மின் விநியோகம் தடைப்பட்டுள்ளதாகவும், அதனை சீர் செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கினிகத்தேனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43